Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு வழியா வில்லனை தேர்வு செய்த வலிமை படக்குழு.. தல தீபாவளி கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
தல அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. வலிமை படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. இருந்தும் படத்தின் நாயகி மற்றும் வில்லன் ஆகியோர் இல்லாமலேயே படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
வில்லன் மற்றும் நாயகி தேர்வில் தொடர்ந்து இழுபறி நடந்து வருவதால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா என பலரும் கவலையில் உள்ளனர். அஜித் ரசிகர்களும் போனி கபூரிடம் அன்பாகவும் கோபமாகவும் கேட்டு பார்த்து விட்டனர். இருந்தும் தற்போது வரை தமிழ்நாட்டு தல ரசிகர்கள் பக்கம் மட்டும் அவர் செவி சாய்க்கவில்லை.
பாலிவுட் ஹீரோயின் தான் நடிக்கப் போகிறார் என்பது உறுதியான தகவல். ஆனால் அது யார் என்பதில் தான் இவ்வளவு தாமதம். நடிகை ஹூமா குரேஷி மட்டுமே கடைசி தேர்வாக உள்ளாராம். ஹீரோயினை விட ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது தல அஜித்துக்கு யார் வில்லன் என்பது தான்.
ஏனென்றால் தல அஜித்துக்கு வில்லனாக நடித்து தான் அருண் விஜய் தற்போது நட்சத்திர நாயகனாக உயர்ந்துள்ளார். அதேபோல் பிரசன்னா, அருண்விஜய் என பலரின் பெயர்கள் அடிபட்ட நிலையில் தெலுங்கில் இருந்தும் கார்த்திகேயா போன்ற நடிகர்களின் பெயர்கள் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.
ஆனால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து பெயர் பெற்ற நவதீப் என்பவர் தல அஜித்துக்கு வில்லனாக உள்ளார். ஏகன் படத்திற்கு பிறகு தல அஜித்துடன் நவ்தீப் இணைய இருப்பதால் தற்போது ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏறியுள்ளது.
விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது. வலிமை படம் 2020 தீபாவளி வெளியீடாக வெளிவரும் என ஏற்கனவே படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
