Tamil Cinema News | சினிமா செய்திகள்
தல அஜித்துக்கு கொடூர வில்லனாக பிரபல நடிகர்.. அப்ப சண்டை காட்சிக்கு பஞ்சமே இருக்காது
தல அஜித் நடிப்பில் அடுத்த வருட தீபாவளிக்கு வெளிவர இருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை சதுரங்க வேட்டை இயக்குனர் வினோத் இயக்குகிறார். இந்த படத்தை போனிகபூர் மிகப்பெரும் பொருட்செலவில் தயாரிக்க உள்ளார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார்.
வசூல் நாயகனாக வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் தல அஜித் தற்போது அடுத்த படத்தின் வேலைகளில் பிசியாக இருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்ஷன் அவதாரத்தில் எடுக்கப்பட இருக்கும் வலிமை திரைப்படத்திற்கு இதுவரை ஹீரோயின் யார் என்பதை படக்குழு முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் படத்தில் அஜித்துக்கு வில்லன் யார் என்பதையும் முடிவு செய்யாமல் இருந்தனர். இந்த நேரத்தில் சமூக வலைதளங்களில் என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் அருண் விஜய் தான் வில்லன் என பல செய்திகள் வெளிவந்தன.
ஆனால் தற்போதைய தகவல் படி அஜித்துக்கு வில்லனாக பிரபல தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர் RX 100, கேங் லீடர் போன்ற படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

karthikeya
மேலும் படத்தில் நாயகியாக பாலிவுட் நடிகைகள் யாரோ ஒருவரை புக் செய்வதில் மும்முரமாக உள்ளது படக்குழு.
தல தீபாவளி.!
