Tamil Cinema News | சினிமா செய்திகள்
விவேகம் படத்தைப்போல் வலிமை கிளைமாக்ஸில் சிக்ஸ் பேக்கில் வரும் தல அஜித்.. வெறித்தனமாக கொண்டாடும் ரசிகர்கள்!
தல அஜித் தன்னுடைய படங்களில் பெரும்பாலும் தன்னுடைய உடல் எடை அதிகரிக்காமல் உடற்பயிற்சி செய்து வருவார். ஆனால் சில சமயங்களில் அது சரியாக அமையாமல் போய்விடும்.
ஆனால் விவேகம் படத்திற்காக கட்டுமஸ்தான உடலை ஏற்றி படம் முழுக்க மிரட்டலான தோற்றத்தில் வந்தார். கிளைமாக்ஸ் காட்சிகளில் சட்டையை கழற்றிக் கொண்டு அஜித் சண்டை போட தியேட்டரில் ரசிகர்கள் விசில் சத்தம் பறந்தது.
இந்நிலையில் மீண்டும் தன்னுடைய உடல் எடையில் அக்கறை எடுத்துக் கொண்டு இந்த லாக் டவுன் நாட்களில் தீவிரமாக உடல் எடையை குறைத்து கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறி வருகிறாராம்.
வலிமை படத்தின் மிரட்டலான தோற்றத்தில் இருக்க வேண்டும் என படம் ஆரம்பிக்கும்போதே வினோத் அஜித்திடம் கோரிக்கை வைத்தாராம். அதற்கேற்றார் போல் தற்போது வரை தினமும் உடற்பயிற்சி செய்துவிட்டு தான் படப்பிடிப்புக்குச் செல்கிறாராம்.
தற்போது படப்பிடிப்புகள் எதுவும் நடக்காத நிலையில் உடல் எடையை குறைத்து சிக்ஸ் பேக் வைப்பதில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறாராம் தல அஜித்.
இதனால் விவேகம் படத்தை போல வலிமை படத்திலும் க்ளைமாக்ஸ் காட்சியில் சட்டையை கழற்றிவிட்டு சிக்ஸ் பேக்குடன் சண்டை போடுமாறு கதை அமைந்துள்ளதாக வலிமை வட்டாரங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன.
