fbpx
Connect with us

பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் தல மற்றும் தளபதி.. களைகட்டும் சூட்டிங் ஸ்பாட்

thala-thalapathy

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பல வருடங்களுக்கு பிறகு ஒரே இடத்தில் தல மற்றும் தளபதி.. களைகட்டும் சூட்டிங் ஸ்பாட்

தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகியோர் தமிழ் சினிமாவின் முடிசூடா மன்னர்கள். இவர்களது படம் வந்துவிட்டால் தமிழ்நாடு திருவிழாவைப் போல் காட்சியளிக்கும். அந்த அளவுக்கு ரசிகர் பட்டாளங்களை கொண்டவர்கள்.

ஆரம்ப காலத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். மீண்டும் தற்போது வரை அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இருவரும் அந்த வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது அனைவரும் அறியப்படாத உண்மை.

ஆம். நீண்ட நாட்களுக்கு பிறகு தளபதி விஜய் மற்றும் தல அஜித் ஆகியோரின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடைபெற உள்ளன. அதாவது அஜித்தின் வலிமை திரைப்படமும், விஜய்யின் தளபதி-64 திரைப்படமும் டெல்லியில் நடைபெற உள்ளது.

கடைசியாக மங்காத்தா மற்றும் வேலாயுதம் ஆகிய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஒரே இடத்தில் நடந்த போது தல அஜித்திற்கு பிரியாணி செய்து கொடுத்ததற்காக தளபதி விஜய் கைக்கடிகாரம் ஒன்றை பரிசளித்தது நினைவுகூரத்தக்கது.

mankatha-shooting-spot

mankatha-shooting-spot

தற்போது அதே போல் இருவரும் சந்தித்துக் கொள்வார்கள் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top