தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல், அஜித்தின் நடிப்பில் வரும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவித்து தள்ளுகிறது.
தற்போது தல அஜித் போனி கபூர் தயாரிப்பில், H. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘வலிமை’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது தல அஜித் செருப்பு விளம்பர படமொன்றில் நடித்திருக்கும் வீடியோ இணையத்தில் காட்டுத் தீ போல் பரவுவதோடு, அவரது ரசிகர்களால் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
அதாவது கோலிவுட்டில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித். இவர் இந்த இடத்தை அடைவதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டு இருக்கிறார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
ஏனென்றால் இவரது ஆரம்பகால சினிமா வாழ்க்கை பல அடிகளை வாங்கி இருந்தாலும், தற்போது இவர் யாரும் அசைக்க முடியாத இமாலய வெற்றியை தனது சினிமா வாழ்க்கையில் எட்டியுள்ளார். அதற்கு சாட்சி இவரது ரசிகர்கள் தான்.

இப்படி இருக்க தல அஜித் ஆரம்பத்தில் ஹவாய் செருப்பு விளம்பரம் ஒன்றில் நடித்திருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது மட்டுமல்லாமல் அந்த வீடியோவில் தல அஜித் ஸ்கூல் பையன் போல செம க்யூட்டாக இருக்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த தல ரசிகர்கள் அனைவரும் தற்போது அவர் சினிமா வாழ்க்கையில் பெற்றிருக்கும் வெற்றியை எண்ணி மெய்சிலிர்த்து உள்ளதாக தெரிவித்து வருகின்றனர்.
தல அஜித் நடித்த விளம்பர படத்தின் வீடியோவை காண கீழே கிளிக் செய்யவும்.