Connect with us
Cinemapettai

Cinemapettai

arjun-ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஆக்க்ஷன் கிங்கின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் மிரட்ட உள்ள தல.. மெர்சலான அப்டேட்!

தற்போதெல்லாம் ஹாலிவுட்டை போல தமிழ் சினிமா துறையிலும் வெற்றி படங்களின் இரண்டாம், மூன்றாம் பாகங்கள் எடுப்பது வழக்கமாக மாறிவிட்டது. இவ்வாறு உருவாகும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்சன் கிங் அர்ஜுனின் சூப்பர் ஹிட் படமான ‘முதல்வன்’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அதாவது தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்றழைக்கப்படும் ஷங்கரின் இயக்கத்தில், அர்ஜுனின் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் தான் முதல்வன். இந்த நிலையில் ஷங்கர் முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க உள்ளதாகவும், அந்த படத்திற்காக தல அஜித்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்களிலிருந்து தகவல்கள் கசிந்து வருகின்றன.

தற்போது ஷங்கர் ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து முதல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு வேலைகள் துவங்க உள்ளதாம். அத்தோடு ‘முதல்வன் 2’ படத்தின் கதையை இயக்குனர் சங்கர் தல அஜித் இடம் கூறியுள்ளதாகவும், அஜித்துக்கு படத்தின் கதை மிகவும் பிடித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் தல அஜித் தற்போது ‘வலிமை’ படத்தில் பிசியாக நடித்துக் கொண்டிருப்பதால், ஷங்கரிடம் முதல்வன் 2 படத்தை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியுள்ளாராம். இதனால் ‘முதல்வன் 2’ படம் தான் ‘தல 61’ படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால், தற்போதெல்லாம் தல அஜித் சோசியல் பிரெண்ட்லி படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் ஷங்கரின் ‘முதல்வன் 2’ படத்தில் தல அஜீத் நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சினிமா வட்டாரங்களில் பரவலாக கிசுகிசுக்கப்படுகிறது.

arjun-banner

arjun-banner

எனவே, பிரம்மாண்டதோடு, ஈரெழுத்து வீரம் கூட்டணி போட போவதை கேட்ட தல ரசிகர்கள் பலர், இந்த தகவல்களை அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனராம்.

Continue Reading
To Top