Tamil Cinema News | சினிமா செய்திகள்
விஜய்க்காக எழுதிய கதையை அப்படியே அஜீத்துக்கு சொல்லி ஓகே பண்ணி இயக்குனர்.. தெறிக்கவிட்ட போகும் தல61!
சமீபகாலமாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான தல அஜித் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் செய்யும் ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் பழைய மசாலா இயக்குனர்களை எல்லாம் ஓரம் கட்டியது தான்.
அந்த வகையில் தளபதி விஜய் அட்லி படங்களையும், தல அஜித் சிறுத்தை சிவா படங்களையும் சமீபகாலமாக தவிர்த்து வருகின்றனர். இதில் அஜித் மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைய வாய்ப்பு இருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.
இது ஒருபுறமிருக்க சத்தமில்லாமல் தல61 பட வாய்ப்பை உறுதி செய்துள்ளார் பிரபல இயக்குனர். இந்த செய்தி தான் தற்போது தல ரசிகர்கள் இடையே மிகுந்த கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தல அஜித் தொடர்ந்து திறமையான இயக்குனர்கள் உடன் பணியாற்றுவது என முடிவு செய்த நிலையில், சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற வெற்றி படங்களை கொடுத்த வினோத்துக்கு தொடர்ந்து இரண்டு படங்கள் வாய்ப்பு கொடுத்துள்ளார்.
தற்போது வலிமை படத்தில் நடித்து வரும் தல அஜித் இந்த ஊரடங்கு சமயத்தில் அடுத்த படத்திற்கான கதையை தேர்வு செய்யலாம் என முடிவு செய்து பிரபல பெண் இயக்குநரை நீண்ட நாட்களாக தொடர்பு கொண்டுள்ளார்.
அவர் வேறு யாரும் இல்லை. சுதா கொங்கரா தான். இவர் ஏற்கனவே தளபதி65 படத்திற்காக விஜய்க்கு ஒரு கதைசொல்லி நிலையில் இடையில் முருகதாஸ் புகுந்து குழப்பியதால் அதே கதையை அஜீத்துக்கு சொல்லி ஓகே செய்து விட்டாராம்.
சுதா கொங்கரா சொன்ன கதையில் சில திருத்தங்களை மாற்ற சொன்ன தல அஜித் வலிமை படத்திற்கு பிறகு சுதா கொங்கரா படத்தில்தான் நடிக்க உள்ளார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணிக்கு தல ரசிகர்கள் வெயிட் செய்கிறீர்களா என்பதை கமெண்டில் தெரிவிக்கலாம்.
சூரரை போற்று படம் வரும்வரை தல ரசிகர்கள் சற்று கலக்கத்தில் தான் இருப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
