fbpx
Connect with us

Cinemapettai

தல61 படத்தை தயாரிக்கும் விஜய் பட நிறுவனம்.. இப்போ 300 கோடி வசூல் சொன்னா தல ரசிகர்கள் நம்புவார்களா?

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தல61 படத்தை தயாரிக்கும் விஜய் பட நிறுவனம்.. இப்போ 300 கோடி வசூல் சொன்னா தல ரசிகர்கள் நம்புவார்களா?

வலிமை படம் பாதி படப்பிடிப்புகள் மீதமுள்ள நிலையில் தற்போது அஜித்தின் தல61 படத்தைப் பற்றிய செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற தரமான படங்களை கொடுத்த சுதா கொங்கரா தான் தல61 படத்தின் இயக்குனர் என அரசல் புரசலாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இது உண்மையாகும் பச்சத்தில் தல ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தல அஜித் தொடர்ந்து மசாலா இயக்குனர்களை ஓரம் கட்டிவிட்டு கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர்களை தேடித்தேடி நடித்து வருகிறார்.

இது ஒருபுறமிருக்க தல61 படத்தைத் தயாரிக்கப்போவது விஜய் பட நிறுவனம்தான் என்று தெரிந்த நிலையில் தல ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கின்றனர்.

விஜய்யின் சமீபத்திய சென்சேஷனல் ஹிட் படமாக இருந்தது பிகில். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருந்தது என்பதை அவர்களே பல பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

இதில் கொடுமை என்னவென்றால் தயாரிப்பாளர் நேரடியாக பிகில் வெற்றிப்படம் என்று கூறியும் சில தல ரசிகர்கள் பிகில் தோல்விப்படம் என கூறி வந்தனர். 300 கோடி வசூல் சும்மா புருடா என்றும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் தல அஜித்தின் அடுத்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கும் நிலையில் அஜித் படம் வெற்றியடையும் போது 300 கோடி என்று சொன்னால் அஜீத் ரசிகர்கள் என்ன செய்வார்கள்?

ஒருவேளை விஜய்யின் தோல்வி படத்தால் நஷ்டமடைந்த நிறுவனத்தை தல அஜித் காப்பாற்றி விட்டார் என்று சொல்வார்களோ. அஜித்தின் விஸ்வாசம் படம் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிட்டத்தட்ட 200 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.

இது எப்படியோ, தல61 தாறுமாறு!

Continue Reading
To Top