Connect with us
Cinemapettai

Cinemapettai

red-priya-gill-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் ரெட் பட நாயகி தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இன்னமும் ஒல்லிக்குச்சி உடம்புக்காரி தான்!

தல அஜித் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ரெட். இந்த படத்தை தற்போதைய பிரபல காமெடி நடிகர் சிங்கம்புலி இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார்.

ஒல்லிக்குச்சி உடம்புக்காரி எனும் பாட்டின் மூலம் மிகவும் பிரபலமான நாயகி பிரியா கில். வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரியா கில் தமிழில் தல அஜித்துடன் ரெட் படம் மட்டுமே நடித்தார்.

அதன்பிறகு தமிழில் எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை. ஹிந்தியில் பல படங்களில் நடித்துள்ள பிரியா கில் அவ்வப்போது தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்து வந்துள்ளார்.

அடிப்படையில் பஞ்சாபி பெண்ணான இவர் பஞ்சாபி மொழி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது 42 வயதாகும் பிரியா கில் இன்னும் பார்ப்பதற்கு இளம் நடிகை போலவே தோற்றமளிக்கிறார்.

ஆனால் 2006-ம் ஆண்டுக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் இருந்து ஒதுங்கிக் கொண்ட பிரியா கில் தற்போது வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

priya-gill-cinemapettai

priya-gill-cinemapettai

Continue Reading
To Top