அஜித் தான் உண்டு தன் வேலையுண்டு என்று மட்டுமே இருப்பவர். எப்போதும் அரசியல் சார்ந்த கருத்துக்களை கூட அவர் கூறாதவர்.

ஆனால், அரசியல் என்றுமே அவரை சுற்றியே இருக்கும், தன் ரசிகர்களிடம் அரசியல் சாயம் தன்னை வைத்து இருக்கக்கூடாது என்பதற்காகவே தன் மன்றங்களை கலைத்தவர்.

இந்நிலையில் தொலைக்காட்சி விவாதத்தில் மயில்சாமி பேசுகையில் ‘அரசியல்வாதிகளுக்கு நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் ஒரு அச்சம் உள்ளது.

ரஜினி, கமல் கட்சி ஆரம்பித்தால் சில வாக்குகள் அவர்களுக்கு(அரசியல் பிரமுகர்) குறையும், மேலும், அஜித்குமார் கட்சி ஆரம்பித்தால் பல வாக்குகள் குறையும்’ என்று கூறியுள்ளார்.