சர்ப்ரைஸ் கொடுத்து மூழ்கடித்த ஏகே-61.. எப்போது ரிலீஸ் தெரியுமா.?

அஜித் தற்போது மீண்டும் வலிமை கூட்டணியுடன் இணைந்து அடுத்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் அஜித் முடிந்த வரையில் இந்த படத்தை விரைவாக முடித்து விட வேண்டும் என்று மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார்.

தற்போது விறுவிறுப்பாக படமாக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 30 சதவீதம் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே படத்தில் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன. அதில் அஜித் தாடி வைத்திருப்பது போன்ற தோற்றத்துடன் நடித்துள்ளார்.

அந்தக் காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்த இயக்குனர் தற்போது அஜித்தை வேறு ஒரு லுக்கில் காட்ட இருக்கிறார். அது தொடர்பான காட்சிகள் தான் தற்போது படமாக்கப்பட இருக்கிறது. மேலும் அந்த காட்சிகளுக்காக அஜித் ஒரு புதிய தோற்றத்துடன் நடிக்க இருக்கிறார்.

ஏற்கனவே இந்தப் படத்தில் அஜித் மிகவும் இளமையான தோற்றத்தில் நடிக்க போகிறார் என்ற ஒரு செய்தி வெளிவந்தது. கடந்த சில திரைப்படங்களில் அஜித்தை சற்று வயதான லுக்கில் பார்த்து வந்த ரசிகர்கள் இந்தப் படத்தின் மூலம் அவரை புதிய லுக்கில் காண ஆவலுடன் இருக்கின்றனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அஜித் சூப்பரான ஒரு லுக்கில் வந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த இருக்கிறார். மேலும் இந்த படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட போனிகபூர் முடிவு செய்திருக்கிறார். அதனால் வினோத் தற்போது படு பிசியாக வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

வலிமை திரைப்படம் நீண்ட நாட்களாக இழுத்து ரசிகர்களை ஒரு வழி ஆகிவிட்டது. இந்தப் படத்தில் அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாது என்று படக்குழுவினர் தற்போது தீயாக வேலை செய்து வருகின்றனர். இந்தப் படத்தை தொடர்ந்து அஜித், விக்னேஷ் சிவன், சிறுத்தை சிவா ஆகியோர் உடன் கூட்டணி அமைக்க உள்ளார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்த வருட வெளியீடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

- Advertisement -