fbpx
Connect with us

Cinemapettai

டிவியில் பெரும் அடி வாங்கிய நேர்கொண்ட பார்வை.. சீரியலை விட மோசம்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

டிவியில் பெரும் அடி வாங்கிய நேர்கொண்ட பார்வை.. சீரியலை விட மோசம்

தல அஜித் நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்கள் வெளியாகி இரண்டுமே வசூலில் சக்கை போடு போட்டது.

நேர்கொண்ட பார்வை திரைப்படம், சீரியல்களிடம் அடி வாங்கியது தான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக உள்ளது. ஆமாம். தீபாவளியன்று ஜீ தொலைக்காட்சியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் முதல் முதலாக போடப்பட்டது. TRP ரேட்டிங்கில் மாஸ் காட்டும் என நினைத்த இந்தபடம், சீரியல்கள் அளவுக்கு கூட பார்வையாளர்களை பெறவில்லை என்பது சோகமான விஷயமாக உள்ளது.

ஆனால் அதே நேரத்தில் சன் டிவியில் முதன்முதலாக போடப்பட்ட காஞ்சனா-3 திரைப்படம் TRP ரேட்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆகையால் எப்போதுமே TRP என்றால் சன் டிவிதான் மாஸ் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.

அதேபோல் இந்த வருடத்தில் முதல் இடத்தில் இருக்கும் TRP ரேட்டிங் படம் என்றால் அது தல அஜித்தின் விஸ்வாசம் படம் தான். துண்டு ஒரு தடவைதான் தவரும் என ரசிகர்கள் மனதை தேத்தி வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top