fbpx
Connect with us

Cinemapettai

மங்காத்தா படத்தில் அஜீத் அணிந்திருக்கும் டாலருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்.. கதையோட முக்கிய அம்சமே இதுதான்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மங்காத்தா படத்தில் அஜீத் அணிந்திருக்கும் டாலருக்கு பின்னால் ஒளிந்திருக்கும் ரகசியம்.. கதையோட முக்கிய அம்சமே இதுதான்

அஜித் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான மங்காத்தா படத்தை அவ்வளவு எளிதில் அஜித் ரசிகர்கள் மறந்துவிட மாட்டார்கள். அதுவரை தோல்வி முகத்தையே சந்தித்துக் கொண்டிருந்த அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

முதலில் மங்காத்தா படத்தில் அஜீத் கமிட்டான போது வெங்கட்பிரபு இயக்கத்தில் நீங்க நடிக்கிறீங்களா என அஜித்தை கிண்டல் செய்தார்களாம். காரணம் வெங்கட்பிரபு அவ்வளவு பெரிய இயக்குனர் கிடையாது, அஜித்தின் படங்களும் தொடர்ந்து தோல்வியை சந்தித்து கொண்டிருந்ததால் இப்படி ஒரு வேடிக்கை கோலிவுட் வட்டாரங்களில் நிறைவேறியது.

படம் வெளியான பின்பு மொத்த பேரும் மூஞ்சியில் கரி பூசியது போல அமைந்தது படத்தின் வெற்றி. விநாயக் மகாதேவ் கதாபாத்திரத்தை வில்லனிஷம் கலந்து மிரட்டி விட்டிருப்பார் அஜித். இப்பொழுதுகூட டிவியில் போட்டாலும் அதை பார்ப்பதற்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். யுவனின் தீம் மியூசிக் இன்றும் பலரது ரிங்டோன். தற்போது மங்காத்தா படத்தில் அஜித்தை விட மிக முக்கியமான கதாபாத்திரம் வகித்தது அஜித்தின் கழுத்தில் இருக்கும் அந்த டாலர் செயின் தான்.

அஜித் கழுத்தில் டாலர் இருக்க வேண்டும் என்பதுதான் படத்தின் கதையாகவும், அந்த டாலரால் தான் கதையில் திருப்புமுனை ஏற்பட வேண்டும் என்றும் வெங்கட்பிரபு உறுதியாக இருந்தாராம்.

படத்தின் முதல் நாள் சூட்டிங் வரை அது எப்படி இருக்க வேண்டும் என்பதில் பல குளறுபடி நிகழ்ந்ததாகவும், இறுதியில்தான் போலீஸ் கதை மற்றும் சஸ்பெண்ட் ஆன அதிகாரி ஆகிய வகையில் கதை நகர்வதால் கைவிலங்கு போல செய்துவிடலாம் என முடிவெடுத்தார்களாம்.

mankatha-ajith

mankatha-ajith

இதனை மங்காத்தா படத்தின் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய வாசுகி பாஸ்கர் ட்விட்டர் பக்கத்தில் இந்த ரகசியத்தை பகிர்ந்துள்ளார்.

இதுவே அந்த டாலரை வைத்துதான் தல அஜித் இறந்துவிட்டதாக படம் முடிவடையும் வகையில் கதை அமைந்திருக்கும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top