அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திய அஜித்.! ரசிகர்கள் கூட்டத்தால் சங்கடம் - வீடியோ உள்ளே - Cinemapettai
Connect with us

Cinemapettai

அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திய அஜித்.! ரசிகர்கள் கூட்டத்தால் சங்கடம் – வீடியோ உள்ளே

ajith-in-jayalalitha-funeral

News | செய்திகள்

அதிகாலையிலேயே அஞ்சலி செலுத்திய அஜித்.! ரசிகர்கள் கூட்டத்தால் சங்கடம் – வீடியோ உள்ளே

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்ததையோட்டி அவரது உடலுக்கு நிறைய பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். நடிகர் அஜித்தால் பல்கேரியா சென்றதால் நேரில் வரமுடியாத சூழல் ஏற்பட்டு இரங்கல் மட்டும் தெரிவித்திருந்தார்.

ஆனால் 12 மணிநேரம் பயணம் செய்து பல்கேரியாவில் இருந்து இன்று விடியற்காலையிலேயே அவரது மனைவி ஷாலினி, ஷாலினி சகோதரர் ரிச்சர்ட் ஆகியோருடன் மெரினா பீச்சில் முதல்வரின் உடல் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று மரியாதை செலுத்த வந்தார்.

நடிகர் அஜித் வருவது குறித்து பெரிதும் செய்தி வெளி வரவில்லை. ஆனாலும் நியூஸ் லீக் ஆகி ரசிகர்கள் அஜித்தை காண அங்கு வந்தனர். அஜித்தை பார்த்த சந்தோஷத்தில் பல ரசிகர்கள் செல்பி எடுக்க தொடங்கி விட்டனர். இது அவருக்கும் கொஞ்சம் தர்மசங்கடமாக தான் இருந்தது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top