fbpx
Connect with us

Cinemapettai

விஜய்க்கு மட்டும் நல்ல பாட்டா அமையுது.. பிரபல பாடகியிடம் செல்லமாய் கோபப்பட்ட தல அஜித்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்க்கு மட்டும் நல்ல பாட்டா அமையுது.. பிரபல பாடகியிடம் செல்லமாய் கோபப்பட்ட தல அஜித்

தல அஜித் மற்றும் விஜய் படங்களின் சாதனைகளை பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. சமீபகாலமாக படத்துக்குப்படம் இருவரின் மார்க்கெட் நிலவரங்கள் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

குறிப்பிட்ட சில வருடங்களுக்கு முன்பு இருவருமே ஒரு வெற்றி கொடுப்பதற்காக போராடிக் கொண்டிருந்தவர்கள் தான். அதுவும் அஜித்துக்கு சொல்ல வேண்டியதில்லை. தொடர்ந்து பல படங்கள் தோல்வி கொடுத்த போதும் அவரை விட்டுக் கொடுக்காமல் இருந்தார்கள் அவரது ரசிகர்கள்.

அதுவே அவருக்கு ஒரு தெம்பாக மாறி தற்போது தொடர் வெற்றிகளை குவித்து வருகிறார். சமீபத்தில் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு முன்னணி பாடகி சுசித்ரா விஜய் பற்றி அஜித் தன்னிடம் செல்லமாக பொறாமைபட்டதை கூறி இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

வேட்டைக்காரன் படத்தில் தளபதி விஜய் அனுஷ்கா நடிப்பில் ரொமான்டிக் பாடலாக உருவாகி இருந்தது ஒரு சின்ன தாமரை பாடல். இந்த பாடலை சுசித்ரா பாடியிருந்தார். இந்த பாடல் தான் தல அஜித்துக்கு மிகவும் பிடித்த பாடல் என அவர் கூறியது விஜய் ரசிகர்களை கொண்ட வைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தல அஜித் சுசித்ராவிடம், இந்த விஜய் பயலுக்கு மட்டும் நல்ல நல்ல பாட்டா அமையுது, எனக்கு ஒன்னும் அமைய மாட்டேங்குது என செல்லமாக பொறாமைபட்டாராம். சுசித்ரா, சுசிலீக்ஸ் என்ற பிரச்சினையில் மாட்டிய பிறகு தற்போதுதான் அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாகவும் அதில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top