Tamil Cinema News | சினிமா செய்திகள்
பாலிவுட்டில் அஜித்துக்கு ஒரு இடம்.. இனி ஏறுமுகம்தான்
பாலிவுட்டில் அஜித்துக்கு ஒரு இடம்
விஸ்வாசம் படத்தின் டீசர் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வெளிவரும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். இது தல அஜித், சிவா இயக்கத்தில் நடிக்கும் நான்காவது படம் ஆகும். இவர்கள் இணைந்து நடிக்கும் அனைத்து படங்களும் ‘வி என்ற எழுத்தில் தொடங்கும். அதுமட்டுமல்லாமல் சென்டிமெண்டாக அனைத்து அப்டேட்களும் வியாழக்கிழமையே அவர்கள் வெளியிடுவார்கள்.

viswasam-still11
இந்தப் படத்தின் ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் கிட்டத்தட்ட ரூபாய் 13 கோடிக்கு விலை போன தான். இது அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் அவர் படங்களிலேயே இதுதான் அதிக விலை போன படமாகும்.
விஸ்வாசம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட படத்துடன் நேருக்கு நேராக முதல் முதலாக மோதுகிறார்கள். யார் ஜெயிப்பார்கள் என்று பொருத்திருந்து பார்க்கலாம். அஜித்துடன் போட்டி போடுவது ரஜினியே ஆர்வமாக இருக்கிறாராம். நல்ல ஆரோக்கியமான போட்டியாக இருக்கும் என நினைக்கிறாராம்.
