அதிமுகவின் அடுத்த தலைவர் அஜீத் குமார் என தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஊடகங்கள் புரளியை கிளப்பிவிட்டுள்ளன. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

75 நாட்களாக மருத்துவமனையில் இருந்த அவர் கடந்த 5ம் தேதி காலமானார். அவருக்கு பிறகு அதிமுகவுக்கு தலைமை தாங்கி வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தனக்கு பிறகு அஜீத் தான் அதிமுகவை தலைமை தாங்கி வழி நடத்த வேண்டும் என்றும், அடுத்த முதல்வராக அவர் தான் இருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா தெரிவித்ததாக கடந்த அக்டோபர் மாதம் கன்னட ஊடகங்கள் புரளியை கிளப்பிவிட்டன.

ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால் அதிமுகவின் அடுத்த தலைவர் அஜீத் தான். அம்மாவின் ஆசியோடு கட்சிப் பொறுப்பை அவர் ஏற்பார் என கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஊடகங்கள் சர்வே எடுத்த லிஸ்டில் அஜித் பெயரையும் போட்டு தற்போது புரளியை கிளப்பிவிட்டுள்ளன.

அதிமுகவின் அடுத்த தலைவர் அஜீத். அவர் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை என்று அவரது திரையுலக பயணம் குறித்து விரிவான செய்தி வெளியிட்டுள்ளன கன்னடம், மலையாளம், இந்தி, தெலுங்கு ஊடகங்கள்.

ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்துவிட்டு ஓரமாக ஒதுங்கி இருக்கிறார் அஜீத். சூப்பர் ஸ்டார் கோதாவுக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்று அவர் பாட்டிற்கு இருக்கிறார். இந்நிலையில் அரசியலாவது அஜீத் வருவதாவது என்று அவரை பற்றி நன்கு தெரிந்தவர்கள் கூறுகிறார்கள்.