Connect with us

Cinemapettai

அஜித்தை சூடேற்றிய தயாரிப்பாளர்.. உங்க சவகாசமே வேண்டாம் என்று விட்டு விளாசிய தல

ajith-producer

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தை சூடேற்றிய தயாரிப்பாளர்.. உங்க சவகாசமே வேண்டாம் என்று விட்டு விளாசிய தல

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் நம்பும் நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அஜித்தை நம்பி கோடிகோடியாய் போட்டு படமெடுக்க பல தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில் அஜீத்தின் நம்பிக்கைக்குரிய தயாரிப்பாளர் அவர் முதுகில் குத்தியது அவரை பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளது.

தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தல அஜித், ரத்தினத்தின் மேல் உள்ள நம்பிக்கையால் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த வரை என்னை அறிந்தால் படத்தின் மூலம் மீண்டும் தயாரிப்பாளராக நிலைநிறுத்த செய்தார்.

ஆனால் ரத்தினம் அஜித்தை வைத்து காசு பார்ப்பதில் மட்டுமே குறியாக  இருந்ததாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அளவுக்கு அதிகமாக அஜித் பெயரை சொல்லி பிசினஸ் செய்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக ரத்தினம், அஜித்துக்கு கொடுக்கப்பட்ட சம்பளத்தில் சுமார் 68 லட்சம் டிடிஎஸ் தொகையை கட்டாமல் விட்டு விட்டதாக தெரிகிறது.

இதனால் அந்த நோட்டீஸ் நேராக அஜித் வீட்டிற்கு சென்று உள்ளது. இதனை கண்டு அஜித் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மீண்டும் அஜீத்தை வைத்து படம் தயாரிக்கலாம் என நினைத்த ரத்தினத்திற்கு, தல அஜித் நிரந்தரமாக குட்பை சொல்லி விட்டதாக தெரிகிறது.

நம்பியவர்களை ஏமாற்ற வேண்டாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top