பல ஆபரேஷன். உடம்பில் பல முறிவு, இரும்புத் தகடுகள் என்று இருக்கிறார் அஜீத். தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் ரிஸ்கான காட்சிகளை, டூப் இல்லாமல் நடித்துவிட வேண்டும் என்கிற வெறி அவருக்கு எப்பவும் உண்டு. அதன் காரணமாக வந்த காயங்கள்தான் இவையெல்லாம். விவேகம் படத்திற்காக அஜீத் எடுத்துக் கொண்ட ரிஸ்க் கொஞ்சம் அதிகமானது. ‘மேக்கிங் ஆஃப் விவேகம்’ என்ற தலைப்பில் பல்கேரியாவில் எடுக்கப்பட்ட ரிஸ்க் காட்சிகளை வெளியிட்டால் கூட விவேகம் பட வசூலில் பாதியை கல்லா கட்டிவிடும்.

Ajiths-Vivegam-releaseபடப்பிடிப்பில் எவ்வளவு வலியை பொறுத்துக் கொண்டு நடித்தாரோ, அவ்வளவுக்கும் சேர்த்து சென்னையில் வைத்து வலி பின்னி எடுத்துவிட்டதாம். தோள்பட்டையில் ஏற்பட்டிருந்த அடி, மெல்ல பெரிதாகி ஆபரேஷன் அளவுக்கு கொண்டுபோய் விட்டிருக்கிறது. அஜீத்தை சோதித்த மருத்துவர் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறிவிட, நேற்று இரவு சென்னையிலிருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

நன்கு தேர்ந்த மருத்துவர்களை வெளி மருத்துவமனையிலிருந்து வரவழைத்து இந்த ஆபரேஷனை செய்து முடித்தார்களாம். ஆபரேஷனுக்கு முன்பும் சரி. பின்பும் சரி. வழக்கம் போல அஜீத் கூல் என்கிறார்கள் மருத்துவர்கள். விஜய், அஜித்  ரிஸ்க் காட்சிகளை குறைத்து கொண்டு கதையம்சம் உள்ள கதைகளில் இனி நடித்தால் நல்லா இருக்கும் என்பது வேண்டுகோள்..

ajith