Connect with us
Cinemapettai

Cinemapettai

ajith-cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

எனக்காக தல அஜித் கெஞ்சியும் அவங்க கேட்கல.. வருத்தப்படும் பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். அஜித் நடிக்கும் படங்கள் வெளியாகும்போது தமிழ்நாடு திருவிழாக் கோலம் ஆகிவிடும். அந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்து விடுவார்கள்.

ஒரு கட்டத்தில் சறுக்கலை சந்தித்த தல அஜித் மீண்டும் சுதாரித்துக் கொண்டு தற்போது பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து வருகிறார். ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

தல அஜீத்துக்காக எதையும் செய்ய ரசிகர்கள் தயாராக இருக்கின்றனர். அப்பேர்பட்ட தல அஜித் பிரபல நடிகர் ஒருவருக்காக ஒரு விஷயம் நடப்பதற்காக கெஞ்சி கேட்டும் முடியாது என்று கூறிவிட்டார்களாம்.

தல அஜீத் மனைவி ஷாலினி சகோதரர் ரிச்சர்ட். சமீபத்தில் சர்ச்சையை கிளப்பிய திரவுபதி எனும் படத்தில் நாயகனாக நடித்திருந்தார். ஏற்கனவே இவர் பழைய வண்ணாரப்பேட்டை எனும் படத்திலும் நாயகனாக வந்திருந்தார்.

ரிச்சர்ட் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். சாதி மதம் கடந்து அந்த காதல் நிச்சயதார்த்தம் வரைச் சென்றது. நிச்சயதார்த்தத்திற்கு பிறகு திடீரென திருமணம் நடைபெறாமல் நின்றுவிட்டது. ரிச்சர்ட்க்கும் அந்தப் பெண்ணுக்கும் இடையில் மனக்கசப்பு ஏற்பட்டு விட்டதாம்.

இதற்காக தல அஜித் அந்த பெண்ணின் குடும்பத்தினருடனும் அந்த பெண்ணிடமும் கெஞ்சி பார்த்துள்ளார். ஆனால் அவர்கள் ஒத்து வரவில்லையாம். இதனால் தற்போது வரை ரிசார்ட் திருமணம் செய்யாமல் இருந்து வருகிறார்.

தல அஜித் மற்றும் ஷாலினி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதால் அந்த காதலின் வலி தெரியும் என்பதற்காக தனது மச்சானுக்காக இவ்வளவு இறங்கிப்போய் பெண் கேட்டுள்ள செய்தி தல ரசிகர்களை ஆனந்தக்கண்ணீர் அடைய வைத்துள்ளது.

Continue Reading
To Top