அஜித் ஒரு சிறந்த நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளரின் கஷ்டத்தை புரிந்தவர். தேவையில்லாமல் தயாரிப்பாளருக்கு எந்த வீண்செலவும் வைக்க மாட்டார். அதுமட்டுமின்றி முடிந்தவரை தயாரிப்பாளருக்கு எந்த அளவுக்கு செலவை குறைக்க முடியுமோ அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பார்.

இந்நிலையில் சமீபத்தில் ஸ்லோவோனியாவில் ‘அஜித் 57’ படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அந்த நாட்டின் தட்பவெப்ப நிலையின்படி அங்கு 20 மணி நேரம் பகல் மற்றும் வெறும் 4 மணி நேரம் மட்டுமே இருள் இருக்கும்.

அதிகம் படித்தவை:  என் மகனை பார்த்து அஜித் சொன்ன வார்த்தை- பிரபல இயக்குனர் உருக்கம்

இதனால் படப்பிடிப்பு நேரத்தை தினமும் அதிகப்படுத்த இயக்குனர் சிவா முடிவு செய்து அஜித்திடம் அனுமதி கேட்டாராம். அதற்கு அஜித் தாராளமாக செய்யுங்கள் நான் ரெடி என்று கூறியதால் 60 நாட்களில் முடிக்க வேண்டிய படப்பிடிப்பு வெறும் 32 நாட்களில் முடிந்ததாம். இதனால் தயாரிப்பாளருக்கு பலகோடி மிச்சம் என்று இண்டஸ்ட்ரியில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.