விஜய் மகனுக்கு உதவிய அஜித்.. மெய்சிலிர்த்து போன சஞ்சய்

Vijay – Ajith – Sanjay : விஜய் மகன் சஞ்சய் தந்தையை போலவே சினிமாவில் தான் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் விஜய் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் சஞ்சயைக்கு டைரக்டர் ஆவதில் தான் விருப்பம். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு லைக்கா சுபாஸ்கரன் சஞ்சயின் முதல் படத்தை தயாரிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது.

மேலும் இப்போது சஞ்சய் அந்த படத்திற்கான வேலையில் தான் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் கதாநாயகனாக கவின் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. ஆனால் சஞ்சய்க்கு எந்த வாய்ப்புமே விஜய் வாங்கி தரவில்லை. சஞ்சய் தனது திறமையால் தான் முன்னேற வேண்டும் என்று ஒதுங்கிவிட்டார்.

ஆனால் இப்போது சஞ்சய்க்கு அஜித் உதவியதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா சஞ்சய் இயக்கும் படத்திற்கு பிஆர்ஓவாக பணியாற்றி வருகிறாராம். ஆரம்பத்தில் அஜித்திடம் இதற்கு அனுமதி கேட்டபோது தாராளமாக பண்ணுங்க என்று கூறிவிட்டாராம்.

Also Read : AK 63-இல் நடிக்க போட்டியிடும் 3 முக்கிய வில்லன்கள்.. அஜித்தின் டார்லிங்க்கு அதிக வாய்ப்பு

அதன் பிறகு தான் சஞ்சய் படத்தில் பணியாற்ற சுரேஷ் சந்திரா ஒத்துக்கொண்டு உள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சஞ்சயிடம் தொலைபேசி வாயிலாக அஜித் பேசி உள்ளாராம். மேலும் முதல் படமே மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என்று தனது வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

அதாவது தனது மகனுக்காக விஜய் எந்த வாய்ப்பும் வாங்கி தரவில்லை. ஒரு தந்தையாக மகன் சொந்த திறமையால் தான் முன்னேற வேண்டும் என நினைக்கிறார். அது அவருடைய பார்வையில் இருந்து சரிதான். மேலும் அஜித்தும் விஜய்யின் மகன் என்று பார்க்காமல் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறியதும் மிகப்பெரிய விஷயம் தான்.

Also Read : சினிமாவில் அஜித்தின் நட்பு பாராட்டிய 5 பிரபலங்கள்.. ஷாலினிக்காக பற்ற வைத்து பல்பு வாங்கிய நடிகர்

- Advertisement -spot_img

Trending News