தல அஜித்தின் விசுவாசம் படத்தின் ஷூட்டிங் இந்த மாதத்திற்குள் ஆரம்பித்துவிடுவார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் பேசுகிறார்கள் நடிகை செலக்க்ஷன் இசையமைப்பாளர் என பல வேளைகளில் பரபரப்பாக இருக்கிறார்கள் படக்குழு.

ajith

தல அஜித்தை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை ஆனால் அவர் ரசிகர்கள் அஜித் பெயரை பயன்படுத்தி பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்கள்.

இதோ ஒருசில பதிவு அஜித் ரசிகர்கள் அஜித் மகள் பிறந்தநாளுக்கு தெருவில் இருக்கும் ஆதரவற்றோர்களை குளிக்க செய்து, உன்ன உணவு, உடுத்த துணி என அனைத்தையும் வாங்கி கொடுத்துள்ளார்கள்.

ajith fans

அஜித் ரசிகர்கள் தான் இவ்வாறு செய்கிறார்கள் என்றால் அஜித்தும் இப்படிதான் தனது மகள் அனோஷ்கா பிறந்த நாள் அதை சிறப்பாக கொண்டாடும் வகையில் Ziyas childrens Home குழைந்தகளுக்கு உணவு அளித்துள்ளார் தல அஜித்.

ajith

அந்த நிகழ்வை Facebook இல் பகிர்ந்து உள்ளார் ஒருவர். இதோ அந்தபதிவில் உள்ளது.இன்று இரவு  நம் நீலாங்கரை இல்ல குழந்தைகளுக்கு திடீர் சர்ப்ரைஸாக அஜீத் வீட்டிலிருந்து பிரியாணி வந்திருக்கிறது. எனக்கே நம்பமுடியாமல் எப்படி? என கேட்டேன். அவரை இதுவரை சந்தித்ததுகூட இல்லை.

anoshka

புத்தாண்டு கொன்டாட்டத்திற்கு வந்திருந்த ஒரு பெண் நண்பரின் தந்தை அஜீத்திடம் வேலை செய்வதாகவும், எதேச்சையாய் நமது இல்லத்தை பற்றி அறிந்து உடனே பிரியாணி ஏற்பாடு செய்து தனது ட்ரைவரின் மூலம் கொடுத்தனுப்பியிருக்கிறார் நடிகர் அஜீத்!

anoshka

அஜீத் பற்றி இதுபோல நிறைய விசயங்களை கேள்விபட்டிருக்கையில், அது நமக்கே நடப்பது ஒரு இனிமையான அனுபவம்.நமக்கே சந்தோசமாய் இருக்கும்போது பசங்களின் சந்தோசத்தை கேட்கவும் வேண்டுமா?

anoshka

அவர் செய்தது மிகச்சிறிய விசயம் தான். ஆனால் அதை எல்லோரும் செய்துவிடுவதில்லையே! அதனால்தான் அவர் அஜீத்!

நன்றி! என கூறியுள்ளார்.