Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சத்தமே இல்லாமல் கஜா புயல் பாதிப்பிற்கு அஜித் கொடுத்த தொகை.! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி.!

தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் இவர் எப்போது எதை செய்தாலும் அன்று இணையதள முழுவதும் அதுதான் ட்ரெண்டாக  இருக்கும், இவர் தற்பொழுது விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் சமீபத்தில்தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தது.

kaja-puyal

kaja-puyal

சமீபத்தில் அடித்த கஜா புயலால் டெல்டா மாவட்டங்களே முற்றிலும் பாதித்துள்ளது,அங்கு வாழும் மக்கள் தங்களது இயல்பு நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உணவு இல்லாமலும், உடை இல்லாமல் தங்க இடம் இல்லாமலும்  தவித்து வருகிறார்கள் இதற்காக பலர் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள்.

அதேபோல் சினிமா நட்சத்திரங்களும் பலர் உதவி செய்து வருகிறார்கள், மேலும் பல நட்சத்திரங்கள் நேரில் சென்று தங்கள் முடிந்தது உதவிகளை செய்து வருகிறார்கள், அதேபோல் நடிகர் அஜித் டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 15 லட்சம் காசோலை வழங்கியுள்ளார், இதை முதலமைச்சர் எடப்பாடி அறிவித்த அறிக்கையில் அஜித் வழங்கிய தொகை குறிப்பிட்டுள்ளது இப்படி அஜித் பலமுறை யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருவது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்.மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கோரிக்கையை ஏற்று, “கஜா புயலால்” ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம், சீரமைப்பு பணிகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு, பொதுமக்களால் நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் இதுவரை வழங்கப்பட்ட தொகை 13 கோடியே 32 லட்சத்து 67 ஆயிரத்து 288 ரூபாய். #Gaja

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top