ஒருசில ஆயிரங்கள் தானதர்மம் செய்தாலே விளம்பரப்படுத்தி ஆர்ப்பாட்டம் செய்யும் இந்த காலத்தில் யாருக்குமே தெரியாமல், எந்தவித விளம்பரமும் இல்லாமல் அஜித் செய்த உதவி குறித்து நடிகர் ராதாரவி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு நடிகராக பலரைக் கவர்ந்ததை விட, சக மனிதர்களுக்கு உதவி செய்வதினால் நல்ல மனிதராக அஜித்தை அதிகமானோருக்குப் பிடிக்கும். அதிலும் அதனை விளம்பரப்படுத்துவதையும் விரும்பாதவர்.

இந்நிலையில் கேளம்பாக்கத்திற்கு அருகில் உள்ள ஒரு நிலத்தை வாங்கி, தன்னிடம் பணி புரியும் 12 பேருக்கு கொடுத்துள்ளார் அஜித்.

Aarambam Ajith

இடம் கொடுத்ததோடு மட்டும் அல்லாமல், அந்த நிலத்தில் சொந்த செலவிலேயே வீட்டையும் கட்டிக் கொடுத்திருக்கிறார்.

அதுமட்டுமல்ல, இந்த இடமும் வீடும் தான் வாங்கிக் கொடுத்த விடயத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொண்டாராம்.

விளம்பரத்தை விரும்பி பலரும் உதவி செய்யும் வேளையில், உதவி செய்தது நான் தான் என வெளியில் செல்லாதீர்கள் என கேட்டுக்கொள்ளும் மனம் உள்ளவர் தான் அஜித். தல தலதான் என்கிறது கோடம்பாக்கம். தற்பொழுது

ajithpolice

மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களின் மகன் விஜய்சங்கர் ஒரு கண் டாக்டர் என்பது பலருக்கு தெரிந்திருக்கும். திரையுலகில் உள்ள பலர் இவரிடம் தான் காண்ட்ராக்ட் உள்ளிட்ட கண் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இவரை ஒருமுறை நடிகர் ராதாரவி சந்தித்து பேசியபோது, ‘அஜித் அடிக்கடி தனது மருத்துவமனைக்கு வருவது குறித்து விஜய் சங்கர் கூறினாராம்.

அஜித் எதற்கு கண் மருத்துவமனைக்கு அடிக்கடி வருகிறார் என்று ராதாரவி கேட்டதற்கு ‘கண் சிகிச்சை செய்பவர்களுக்கு பண உதவி செய்ய வருவார் என்றும் இதுவரை சுமார் 5000 பேர்களின் அறுவை சிகிச்சைகளுக்கு அவர் பணம் கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

ajith

ஆனால் இதுகுறித்து அவர் யாரிடமும் இந்த உதவி குறித்து கூறியதில்லை என்றும் எந்தவித விளம்பரமும் இல்லாமல் 5000 பேர்களின் கண்களுக்கு ஒளி கொடுத்தவர் அஜித் என்றும் ராதாரவி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

அஜித்தை தான் பார்த்து வெகுநாட்கள் ஆகிவிட்டாலும் அவரை பற்றி கேள்விப்படும்போது தனக்கு பெருமையாக இருப்பதாகவும், குமணன், கர்ணன் போன்ற வள்ளல்களுக்கு இணையானவர் அஜித் என்றும் ராதாரவி கூறினார்.