எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர், அஜீத் குமார் அவர்கள்.

ajith

தெலுங்குத் திரைப்படத்தில், துணைக் கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தென்னிந்தியத் தமிழ்த் திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர் என்று முத்திரைப் பதித்த அவர், ‘அல்டிமேட் ஸ்டார்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.

ajith

மூன்று முறை ‘ஃபிலிம்ஃபேர் விருதுகளையும்’, இரண்டு முறை ‘சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளையும்’, மூன்று முறை ‘விஜய் விருதுகளையும்’, இரண்டு முறை ‘தமிழ்நாடு மாநில அரசு விருதுகள்’, எனப் பல்வேறு விருதுகளை வென்றுள்ள அவர், ஒரு கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.

நடிகர் அஜித் தன்னை ஏமாற்றிய மேக்கப் மேனை பணியில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தல அஜித் யாருக்கும் தெரியாமல் தனது ரசிகர்களுக்கும், தன்னிடம் பணி செய்பவர்களுக்கும் உதவி வருவது அனைவரும் அறிந்த விஷயம்தான். தன்னையும், தனது வீட்டில் வேலை செய்பவர்களையும் பிரித்து பார்ப்பதே இல்லை அஜித்.

ajith
ajith

இவரது வீட்டில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தார் என்ற செய்தி கடந்தாண்டு வெளியாகி வைரலாகி வந்தது. இந்த நிலையில், அவரை ஏமாற்றினாலும் அவருக்குப் பிடிக்காது.

அப்படி செய்த தனது மேக்கப் மேனை பணியில் இருந்து அஜித் நீக்கிய விஷயம் தற்போது வெளியாகியுள்ளது.

ajith

அஜித்துக்கே தெரியாமல் தயாரிப்பாளரிடம் இருந்து அதிக சம்பளம் கேட்டு வாங்கி வந்துள்ளார் மேக்கப் மேன். இதைக் கேள்விப்பட்ட அஜித் உடனடியாக அந்த மேக்கப் மேனை பணியில் இருந்து தூக்கிவிட்டாராம்.