வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித்.. தளபதியை துவம்சம் செய்ய கண் அசைவு போதும்

Vijay-Ajith: விஜய், அஜித் இருவருமே சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார்கள். ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதை தொடர்ந்து தங்களின் படங்கள் மூலம் நிரூபித்து வருகிறார்கள். இதில் அடுத்தபடியாக தளபதி விஜய் அரசியலில் களம் காண இருக்கிறார். அவரின் பிறந்த நாள் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஆரம்பத்தில் இருந்து விஜய் இதற்கான கட்டமைப்பை சரியாக செய்து வருகிறார். அதன்படி விஜய் ரசிகர் மன்றம் ஆரம்பித்து அதற்கு தலைவர், பொருளாளர் என நியமித்து செயல்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி விஜய் ரசிகர் மன்றம் சார்பாக பொது மக்களுக்கு நிறைய உதவிகளும் செய்து வருகிறார்கள்.

Also Read : 234 தொகுதியில் சாப்பாடு போட்டு ஓட்டு கேட்கும் விஜய்.. தலைவர் கிட்ட இன்னும் நிறைய கத்துக்கணும்

விஜய்யும் தனது ரசிகர்களை ஒன்று கூட்டி அவ்வப்போது பிரியாணி விருந்து வைப்பதை தவறாமல் செய்து வருகிறார். இந்நிலையில் விஜய்யின் ரசிகர் கூட்டம் அதிகம் தான். அதை காட்டிலும் அஜித்துக்கு உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ரசிகர்கள் இருப்பதாக சினிமா விமர்சகர் வலைப்பேச்சு அந்தணன் கூறியுள்ளார்.

அதாவது விஜய் போல அஜித்தும் தனக்கான ரசிகர் மன்றத்தை செயல்படுத்திக் கொண்டிருந்தால் இது வெளியில் தெரியும். ஆனால் அஜித்தை பொருத்தவரையில் இது எல்லாம் வேண்டாம் என்று தனது ரசிகர் மன்றத்தை கலைத்து விட்டார். படத்தை பார்ப்பது மட்டுமே ரசிகர்களின் வேலை, தேவையில்லாமல் ஒரு நடிகருக்காக நேரத்தை செலவிடுவது தவறு.

Also Read : ஏ ஆர் முருகதாஸ் பெருமை பட்ட சம்பவம்.. விஜய் பட வெற்றிக்கு ட்ரீட் கொடுத்த எஸ் ஜே சூர்யா

உங்களுக்கான வேலையை செய்ய வேண்டும் என்பதில் அஜித் உறுதியாக இருக்கிறார். மேலும் விஜய் இவ்வளவு காலமாக கட்டிக் காப்பாற்றி வரும் ரசிகர் கூட்டத்தினால் கூடிய ரசிகர்களை விட, அஜித் ஒரு கண் அசைவு கொடுத்தால் அதிகமாக ரசிகர்கள் கூடுவார்கள் என்பதை அந்தணன் கூறி இருக்கிறார்.

இதேபோல் அஜித்துக்கும் அரசியல் ஆசை இருந்தால் கண்டிப்பாக விஜய்யை காட்டிலும் அவருக்கு ஆதரவு அதிகமாக இருக்கும். ஆனால் அஜித்தை இன்னும் சில காலம் படங்களில் நடித்துவிட்டு ஓய்வெடுக்க ஆசைப்படுகிறார். இதனால் இப்போது விஜய்யின் கொடி ஓங்கி பறக்கிறது.

Also Read : தன்னைவிட அதிக வயதுடைய ஹீரோகளுக்கு 5 படங்களில் அம்மாவாக நடித்த நடிகை.. விஜய், அஜித்துக்கும் இந்த நிலைமைதான்