பாலிவுட் சினிமாவை பொறுத்தவரை முன்னணி நடிகர்களிடம் ஈகோ என்பதே இல்லை. ஒரு காட்சி என்றாலும் நடித்துக்கொடுத்து சென்றுவிடுவார்கள். ஆனால், கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் இருவர் இணைந்து நடித்தால் அதெல்லாம் வரலாறு தான். அந்த வகையில் அஜித் இதுவரை எத்தனை நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் தெரியுமா? பார்ப்போம்.

பாசமலர்கள்

சுரேஷ் சந்திர மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த படம் பாசமலர்கள், இப்படத்தில் அஜித் கிட்டத்தட்ட கெஸ்ட் ரோல் என்றே சொல்லிவிடலாம், இப்படத்தில் அரவிந்த்சாமியுடன் இணைந்து நடித்தார்.

ராஜாவின் பார்வையிலே

இன்று தமிழ் சினிமாவையே ஆளும் விஜய், அஜித் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம் ராஜாவின் பார்வையிலே தான்.

கல்லூரி வாசல்

ஒரு காலக்கட்டத்தில் விஜய், அஜித்தை விட உச்சத்தில் இருந்தவர் பிரசாந்த், அவருடன் அஜித் இணைந்து நடித்த படம் தான் கல்லூரி வாசல்.

பகைவன்

அஜித் வளர்ந்து வந்த நேரம் சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அமைந்த படம் தான் பகைவன், இதில் சத்யராஜ் கொஞ்சம் நெகட்டிவ் கலந்த கதாபாத்திரத்தில் நடித்தார்.

உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன்

அஜித் பெரிய அளவில் வளர்ந்து வந்த நேரம், ஆனால் தன் நண்பர் கார்த்திக் படம் என்பதால், விக்ரமன் கேட்டதற்காகவும் உன்னிடத்தில் என்னைக்கொடுத்தேன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துக்கொடுத்தார். இதேபோல் ஆனந்த பூங்காற்றே படத்தில் கார்த்திக் கெஸ்ட் ரோலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் படித்தவை:  வைரலாகும் நடிகை சாய் பல்லவியின் லேட்டஸ்ட் கியூட் புகைப்படங்கள்.

நீ வருவாய் என, உன்னைக்கொடு என்னை தருவேன்

அஜித்-பார்த்திபன் இருவருமே இந்த இரண்டு படங்களில் இணைந்து நடித்தனர், நீ வருவாய் என படத்தில் அஜித் கெஸ்ட் ரோலில் வர, உன்னைக்கொடு என்னை தருவேன் படத்தில் பார்த்திபன் கெஸ்ட் ரோலில் வந்திருப்பார்.

கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்

பாலிவுட்டிற்கு நிகராக எடுத்த படம் தான் இந்த கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன் மம்முட்டி, அப்பாஸ், ஐஸ்வர்யா ராய், தபு என பல நட்சத்திரங்களுடன் அஜித் இணைந்து நடித்த படம்.

தீனா

அஜித்தின் திரைப்பயணத்தில் செம்ம ப்ரேக் கொடுத்த படம் தீனா, இதில் தான் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்தார்.

அசோகா

அஜித் நடித்த ஒரே பாலிவுட் படம் இது தான், இதில் பாலிவுட் சினிமாவின் பாட்ஷா ஷாருக்கானுக்கு வில்லனாக அஜித் நடித்திருந்தார்.

பரமசிவன், ஏகன்

அஜித் இந்த இரண்டு படங்களிலும் மலையாள நடிகர் ஜெயராமுடன் நடித்திருந்தார்.

அதிகம் படித்தவை:  த்ரிஷாவின் சேட்டையை பார்த்து அதிர்ச்சியாகும் ரசிகர்கள்.! வைரலாகும் புகைபடம்.!

கிரீடம்

அஜித்திற்கு நீண்ட நாள் ராஜ்கிரணுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை, அந்த விருப்பம் கிரீடம் படத்தின் மூலம் நிறைவேறியது.

பில்லா

அஜித்தின் பேவரட் நடிகர்களில் பிரபுவும் ஒருவர், அவருடன் பில்லா படத்தில் இணைந்து நடித்தது மட்டுமின்றி, அசல் அவருடைய தயாரிப்பிலேயே நடித்தும் இருப்பார்.

மங்காத்தா

அஜித்தின் 50வது படம், ஆனால், கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் அர்ஜுன், வைபவ் என பல நட்சத்திரங்களுடன் இப்படத்தில் இணைந்து நடித்திருப்பார்.

ஆரம்பம்

ஆர்யா வளர்ந்து வரும் நடிகர்களின் முன்னணியில் இருந்தவர், அஜித் படம் என்பதால் அவரும் ஓகே சொல்ல, இவர்கள் கூட்டணியில் வெளிவந்து சூப்பர் ஹிட்டாகிய படம் ஆரம்பம்.

வீரம்

வளர்ந்து வரும் நடிகர் விதார்த்துடன் அஜித் இணைந்து நடித்த படம் தான் வீரம், இதில் எத்தனை பேர் இருந்தாலும் அஜித் தோள் மீதே கதை நகரும்.

என்னை அறிந்தால்

தனக்கு ஒரு ப்ரேக் வேண்டுமென்று போராடி வந்த அருண் விஜய்க்கு தன் படத்தில் வில்லனாக நடிக்க வாய்ப்பு கொடுத்தவர் அஜித், அதன் பிறகு அருண் விஜய் மார்க்கெட் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.