செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

கொல மாஸ் சாரே.. குட் பேட் அக்லீ படம் பில்லா மாதிரியா? என்னவா இருக்கும்

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன் ‘குட் பேட் அக்லி’ படத்தினை இயக்கி வருகிறார். இதனால் இப்படம் தரமான பேன் பாய் சம்பவமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படம் எப்போது வரும் என்று சலித்து போன ரசிகர்கள் இப்போது குட் பேட் அக்லி படத்தை தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த படம் பொங்கலுக்கு வெளியாகுமா இல்லை குட் பேட் அக்லி படம் வெளியாகுமா என்ற குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது.

வெளியான வேற லெவல் அப்டேட்

இந்த நிலையில் தற்போது குட் பேட் அக்லி படம் பற்றி வேற லெவல் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இது ஒரு பக்காவான கமெர்ஷியல் படமாக இருக்குமாம். ஏற்கனவே பல ஸ்டைலிஷ் ஆன போட்டோக்களை பதிவிட்டு வருகிறார் அஜித்.

இந்த நிலையில், குட் பேட் அக்லி படத்தில் ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் அஜித் நடிப்பாராம். அதுமட்டுமின்றி, பில்லா படம் போல அவர் தோற்றம் இருக்குமாம். அந்த படத்தில் வரும் அஜித் போலவே யூத் கெட்டப்பில் மாஸ் என்ட்ரி கொடுப்பாராம்.

இதை கேட்ட அஜித் ரசிகர்களை கையில் பிடிக்கவே முடியவில்லை.. ‘கடவுளே அஜித்தே…’, என்றும் ‘கொல மாஸ் சாரே’ என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதற்க்கு நடுவில், விடாமுயற்சி டீஸர் விட, தற்போது குட் பேட் அக்லி படத்தின் டீசர் எப்போது வெளியாகும் என்று கேட்க துவங்கி விட்டனர்.

- Advertisement -

Trending News