அஜித்தின் வலிமை திரைப்படம் தற்போது பல கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் படம் வசூல் ரீதியாக லாபம் என்று கூறுகின்றனர். இதையடுத்து அஜீத் தன்னுடைய 61வது படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் மூலம் மீண்டும் வலிமை கூட்டணி இணைய இருக்கிறது.
விரைவில் ஆரம்பிக்கப் போகும் இந்த படத்திற்காக அஜித் தன்னுடைய உடல் எடையை குறைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக அஜித் உடல் எடை அதிகரித்து காணப்படுகிறார். மேலும் அவர் தன்னுடைய திரைப்படங்களில் எல்லாம் வயதான தோற்றத்தில் வருவதை அவருடைய ரசிகர்களும் விரும்பவில்லை.
இதனால் இந்தத் திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அந்த கருத்தை மாற்றி மிகவும் இளமையாக அவரை காண்பிக்க இருக்கிறார். அதற்காக அஜித் தன்னுடைய உடல் இடையில் 30 கிலோ குறைக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார். இதனால் அவரை புதிய தோற்றத்தில் காண்பதற்காக அவருடைய ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மேலும் உடல் எடையை ஏற்றி இறக்குவது என்பதெல்லாம் அவருக்கு கைவந்த கலை. ஏனென்றால் இதற்கு முன்பு கூட சில திரைப்படங்களுக்காக அவர் இவ்வாறு செய்திருக்கிறார். அந்த வகையில் அவரின் நடிப்பில் வெளிவந்த ஜீ, பரமசிவன், ஆழ்வார், திருப்பதி போன்ற திரைப்படங்களில் எல்லாம் அவர் உடல் இளைத்து மிகவும் ஒல்லியாக இருப்பார்.
அப்படி அவர் உடல் எடையை குறைத்து நடித்த திரைப்படங்கள் எல்லாம் அவருக்கு சாதகமாக இருந்ததா என்று கேட்டால் நிச்சயமாக கிடையாது. அந்த திரைப்படங்கள் அனைத்தும் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்களிடம் போதிய வரவேற்பை பெறத் தவறியது.
இதனால் அந்தப் படங்கள் யாவும் அஜித்தின் திரைப்பயணத்தில் தோல்வி படங்களாக முத்திரை குத்தப்பட்டது. தற்போது இதை கருத்தில் கொள்ளும் அஜித்தின் ரசிகர்கள் அவரின் முந்தைய திரைப்படங்களைப் போலவே தற்போது நடிக்கும் ஏகே 61 திரைப்படமும் அந்த லிஸ்டில் சேர்ந்து விடுமோ என்ற கவலையில் இருக்கின்றனர்.