விவேகம் படத்திற்காக பல்கேரியா நாட்டில் ஒரு பிரம்மானடமான சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது அஜித்குமாரின் தோள்பட்டையில் பலத்த அடி பட்டது.

அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற அஜித்திடம்  அறுவை சிகிச்சை செய்துக் கொள்ள வற்புறுத்தப் பட்டது. படப்பிடிப்பு தடை பெறும் என்ற காரணத்தினால் அவர் அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளாமலே தொடர்ந்து நடித்து வந்தார்.ajith vivegam

படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்னை வந்த அவருக்கு கடும் தோள்பட்டை வலி ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள மருத்துவ மனையில் அஜீத்துக்கு அறிவை சிகிச்சை நடை பெற்றது.

இந்த தகவல் ரசிகர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாகவும் மூன்று மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறி உள்ளனர். அதனால் அஜித் தற்பொழுது ஓய்வில் இருக்கிறார்.

அப்புக்குட்டி அஜித் பற்றி சொன்ன செய்தி சமூகவளைதலங்களில் தீயாய் பரவுகிறது.

‘ஓம் மண்ணெண்ணெயாய நமஹ!’, ‘ஒரே ஒரு குருக்கள் வர்றார் வழிவிடுங்கோ’… இப்படி ஒற்றை காட்சி, ஒருவரி வசனங்களில் ஆரம்பித்த அப்புக்குட்டி, குதிரையுடன் விளையாட்டு, தேசிய விருது, தல ஃபோட்டோஷூட், பல பட கமிட்மென்ட்ஸ்… என பரபரப்பாக இருக்கும் அப்புக்குட்டி.

வீரம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூறுகிறார்.

‘வீரம்’ படப்பிடிப்பில அஜீத் சார் என்கிட்ட, ‘தம்பி எல்லாப் படங்களிலும் ஒரே வித தோற்றத்தில் வருவது உங்க வளர்ச்சிக்குத் தடையா இருக்கும். முடிஞ்சவரை படத்துக்குப் படம் தோற்றத்தை மாற்றப் பாருங்க’னு சொன்னார்.

அப்புறம் அப்படியே நாள்கள் ஓடிடுச்சு. படம் எல்லாம் முடிச்சு கொஞ்சநாள்ல என்னை ஒரு இடத்துக்கு வரச்சொன்னார். அங்கபோன எனக்கு பயங்கர ஷாக்.

என் உடம்புக்கு தகுந்தமாதிரி தைக்கப்பட்ட துணிகள், மேக்கப் பொருள்கள், எனக்காகவே வரவழைக்கப்பட்ட ஒப்பனையாளர்கள்னு அசத்திட்டார். அப்போ எடுத்த போட்டோஸ்தான்.

அதுக்கு அப்புறம் நான் போட்டோவே எடுக்கலை. என்னைக்கோ சொன்னதை ஞாபகம் வெச்சுகிட்டு அதைச் சொன்னபடி செஞ்சிட்டார். அதான் தல. அவர் ரொம்ப பிஸியான நபர்.

அதனால போன் தொடர்புலாம் இல்லை. ஆனா, மறுபடியும் சிவா சாரும் தலயும் என்னைக் கூப்பிடுவாங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்று கூறுகிறார் அப்புக்குட்டி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here