செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

ஷாலினியின் பிறந்த நாளில் Lexus சொகுசு காரை பரிசளித்த அஜித்.. வைரல் போடோஸ்

தமிழ் தெலுங்கில் பந்தம், பிள்ளை நிலா, விடுதலை, சங்கர் குரு, ராஜா சின்ன ரோஜா உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷாலினி. அதன்பின் சினிமாவில் இருந்து விலகியிருந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு தமிழ், மலையாளத்தில் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கி, முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

காதலுக்கு மரியாதை, பிரியாத வரம் வேண்டும், அலைபாயுதே, கண்ணுக்குள் நிலவு, அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களின் மனதைக் கவர்ந்தார். அஜித்குமாருடன் நடித்தபோது காதல் ஏற்பட்டு, இருவரும் கடந்த 24-04- 2000- ல் திருமணம் செய்து கொண்டார். அஜித் – ஷாலினிக்கு அனோஷ்கா, ஆத்மிக் என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.

சினிமாவில் மட்டுமின்றி பாட்மிண்டன் போட்டியிலும் விளையாடி மாநில அளவில் சாதனை படைத்துள்ளார். சினிமாவில் பிஸியாக நடிக்கத்தொடங்கி 5 படங்களில்தான் ஹீரோயினாக நடித்த போதிலும் அத்தனை படங்களும் ரசிகர்களின் பேவரெட் படங்களாக அமைந்தன.

ஷாலினியின் பிறந்த நாளில் பரிசளித்த அஜித்

அதிலும் ஷாலினின் நடிப்பு, அவர் பேச்சு எல்லாம் ரசிகர்களுக்கு பிடித்துப் போனதால் அவர் நடிக்கும் படங்களும் அவர்களுக்கு பேவரெட் படங்களாக அமைந்தன. அதனால் அவர் நடிப்பில் இருந்து விலகி இத்தனை ஆண்டுகள் ஆனபோதிலும் குடும்பத்திற்காக நேரம் ஒதுக்கி வந்தாலும் அஜித்தின் செயல்பாடுகள் முயற்சிகளை ஊக்குவித்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஷாலினி தன் 44 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். வழக்கம் போலவே அடிக்கடி சொகுசு கார் வாங்கி குவித்து வரும் கார் பிரியரான அஜித்குமார், தன் காதல் மனைவி ஷாலினியின் பிறந்த நாளுக்கு சர்ப்பிரைசாக ஒரு லெக்சஸ் காரை பரிசளித்திருக்கிறார்.

ajith-shalini
ajith-shalini-birthday-special

இந்தக் கார் அனைத்து அம்சங்களும் பொருந்தி சூப்பர் சொகுசு கார். இதன் விலை பல லட்சங்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. திரைத்துறையில் உள்ள அன்பான அமைதியான எல்லோருக்கும் முன் மாதிரியான தம்பதியராக அஜித் – ஷாலினி இருப்பதற்கு எல்லோரும் வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

ajith-shalini
ajith-shalini-birthday-special
- Advertisement -

Trending News