தயாரிப்பாளருக்கு மறுவாழ்வு தந்த அஜித்.. வேற யாரும் இதை செய்ய மாட்டாங்க

தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவருடைய நடிப்பை தாண்டி குணத்திற்காகவே இவரை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர். மேலும் அஜித் தனது ரசிகர்கள் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் அஜித்தை பற்றி கூறியுள்ளார்.

அதாவது தற்போது தயாரிப்பாளர்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனை ஹீரோக்களின் சம்பளம் தான். படத்தின் பட்ஜெட்டை விட தற்போது ஹீரோக்களின் சம்பளம் பல மடங்கு கூடியுள்ளது. ஹீரோக்கள் சம்பளத்தை முன்கூட்டியே வாங்கி கொள்வதால் தயாரிப்பாளர்கள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடுகிறது.

மேலும் சில தயாரிப்பாளர்கள் வட்டிக்கு பணம் வாங்கி தான் தங்களது படங்களை தயாரிக்கின்றனர். படம் லாபம் அடைந்தால் தயாரிப்பாளர்கள் தப்பிக்கின்றனர். ஆனால் அதுவே படம் தோல்வியை சந்தித்தால் பெரிதும் பாதிக்கப்படுவது தயாரிப்பாளர்கள் தான்.

இதனால் ஹீரோக்களில் எந்த பிரச்சனையும் சந்திக்கப் போவதில்லை. இந்த படத்திற்கு பேசிய சம்பளத்தை வாங்கிக் கொண்டு அடுத்த படத்திற்கு நடிக்க சென்றுவிடுவார்கள். ஆனால் அஜித் ஒரு நல்ல மனிதர் என அந்த தயாரிப்பாளர் கூறியுள்ளார்.

அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிப்பில் 2017 இல் வெளியான திரைப்படம் விவேகம். மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் தோல்வியையே சந்தித்தது. இதனால் தயாரிப்பாளர் மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்தார்.

இதனால் அஜித் என்னை வைத்து மீண்டும் ஒரு படம் எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால், மிக குறைந்த பட்ஜெட்டில் எடுங்கள் என கூறியுள்ளார். இதனால் மீண்டும் அதே தயாரிப்பு நிறுவனத்துடன் 2019 இல் சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடிப்பில் வெளியான திரைப்படம் விசுவாசம்.

இப்படம் அந்த தயாரிப்பு நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தை பெற்றுத் தந்தது. ஆனால் அஜித் போன்ற மற்ற ஹீரோக்கள் இதைச் செய்வார்களா என்பது மிகப்பெரிய சந்தேகம் தான். ஏனென்றால் தான் நடித்த படம் தோல்வியை சந்தித்தால் மீண்டும் அதே கூட்டணியில் நடிக்கவே தயங்குகிறார்கள்.