கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து கடந்த 2015ல் வெளியான மெகா ஹிட் படம் ‘என்னை அறிந்தால்’. அஜித் கேரியரில்  முக்கியமான படமாக அமைந்த ‘என்னை அறிந்தால்’ ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் அஜித் ஜோடியாக  த்ரிஷாவும், காமெடியனாக விவேக் மற்றும் வில்லனாக அருண் விஜய், பார்வதி நாயர் நடித்திருந்தனர். ஹாரிஷ் ஜெயராஜ் இசையில் வெளியான  பாடல்களும், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், நேற்று சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் மாணவர்களுடனான கலந்துரையாடலில், ‘என்னை அறிந்தால்’  படத்தின் 2ம் பாகம் குறித்து அஜித்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக கவுதம் மேனன் கூறியுள்ளார். இது அஜித்  ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது, ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் பிசியாக இருக்கும் கவுதம் மேனன், அடுத்து விக்ரமுடன் இணைந்து  ‘துருவ நட்சத்திரம்’ படத்தை இயக்கப் போவதாக கூறப்பட்டது. அதன் பின்னர் ‘என்னை அறிந்தால் 2’-ல் அஜித்துடன் மீண்டும்  இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.