ajith-thalaபிரபல நடிகர் அஜித் எந்தவொரு கலை நிகழ்ச்சிக்கும் வரமாட்டார், தன்னுடைய படங்களின் ப்ரோமோஷனுக்கே வரமாட்டார் என்று குற்றசாட்டு உண்டு. இதை அவர் ஒரு கொள்கையாக வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

நடிகர் விஜயகாந்த் தலைமையில் நடிகர் சங்கம் செயல்பட்டபோது சிங்கப்பூரில் ஒரு கலை நிகழ்ச்சி நடத்தினார்கள் ஞாபகம் வருகிறதா, அதில் அஜித்தை கலந்து கொள்ள வைக்க எவ்வளவோ முயன்றார் விஜயகாந்த், கடைசியில் அவர் வரவில்லை.

அதிகம் படித்தவை:  அஜித் அண்ணனுக்கு வில்லனாக நடிக்க வேண்டும்- வில்லன் நடிகரின் ஆசை

ஒரு நாள் நடிகர் சங்கத்தில் அஜித் விஜயகாந்தை சந்தித்து நடிகர் சங்கக் கடனுக்காக மக்களிடம் பணம் வசூலிக்க கூடாது. நம்முடைய நடிகர்களிடமே பணம் வசூலிக்க வேண்டும், முடிந்தவரை கொடுத்தால் போதும் என்று தன்னுடைய பங்குக்கு 10 லட்சம் ரூபாய் செக்கை கொடுத்தார் அஜித்.

அதிகம் படித்தவை:  அஜித் ரசிகர்கள் மீது போலீஸ் புகார்- விஷால் அதிரடி

ஆனால் அதை விஜயகாந்த் ஏற்கவில்லை.அதேபோல் இன்று விஷால், நாசர் தலைமையில் இருக்கும் நடிகர் சங்கம் நட்சத்திர கிரிக்கெட் நடத்தி, தமிழகம் முழுக்க வசூல் வேட்டை நடத்தும் சூழலில், இந்த ப்ளாஷ்பேக்தான் கோலிவுட் பிரபலங்களுக்கு நினைவுக்கு வருகிறது