News | செய்திகள்
கோடி ரூபாய் கொடுத்தாலும் நடிக்க மாட்டேன்! அஜித்தின் ப்ளாஷ்பேக்
தமிழ் சினிமாவிலும் எல்லாவிதத்திலும் வித்தியாசப்பட்டவர் அஜித்.முன்னணி நாயகனாக இருந்தாலும் தனக்கென தனி கொள்கையை வகுத்து வாழ்கிறார். தற்போது நடிகர் சங்க கிரிக்கெட்டுக்கு ஆதரவளிக்கவில்லை என்ற செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் ஜீ படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் ஒன்றை படக்குழுவை சேர்ந்த ஒருவர் பகிர்ந்துள்ளார்.இப்படத்தில் நடித்த போது முன்னணி குளிர்பான நிறுவனம் ஒன்று அஜித் ஒருநாள் விளம்பரத்தில் நடித்தால் ஒரு கோடி ரூபாய் தருவதாக கூறியுள்ளனர்.
அப்போது நெருக்கடியில் இருந்த அஜித்துக்கு மிகப்பெரிய தொகை என்ற போதும் அவர் மறுத்துவிட்டாராம்.நான் எப்போதும் அந்த குளிர்பானத்தை குடிப்பதில்லை, அப்படியிருக்கையில் மக்களை அதை குடிக்க சொல்லி ஏமாற்றுவதில் விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம்.
