அஜித்தா..இது? என்ன ஒரு பாடி என்று விவேகம் படத்தின் முதல் பார்வை போஸ்டரை பார்த்து மிரண்டு போய் இருக்கிறார்கள் அவரின் ரசிகர்களும், முன்னணி ஹீரோக்களும்.

அஜித் மற்ற ஹீரோக்களை போல் சாதாரணமாக ஜிம் போய் வொர்க் அவுட் பண்ணமுடியாதவர். அவருக்கு ஏகப்பட்ட சர்ஜரிகள். அதுவும் இல்லாமல், ‘வேதாளம்’ ஷூட்டிங் கடைசி நாளில் காலில் அடிபட்டதற்கு ஒரு ஆபரேஷன் வேறு செய்தார்.அதனால் கொஞ்சம் குண்டு அஜித்தாகவே காணப்பட்டார்.

ஆனால் ‘விவேகம்’ படத்தில் அஜித் ஒரு இன்டர்போல் அதிகாரி. அதற்கேற்றாற் போல் கொஞ்சமாவது அஜித் இருக்க வேண்டும் என்று ‘யூசூப்’ என்ற பிட்னெஸ் பயிற்சியாளரிடம் பயிற்சி மேற்கொண்டு உடலை கச்சிதமாக்கினார்.

அதனால் இயக்குனர் சிவா, போஸ்டரில் யூசூப்’ பெயரை போட்டு மரியாதை கொடுத்துள்ளார்.