செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

பொங்கல் ரிலீசுக்கு ரெடியாகும் அஜித்.. நெருப்பாய் வேலைகளை முடுக்கி விடும் ஆதிக்கின் வலது கரம்

விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படத்திலும் ஒரே நேரத்தில் அஜித் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சிக்கும் ஆதிக்க ரவிச்சந்திரன் குட் பேட் அக்லி படத்திற்கு வெவ்வேறு விதமான கெட்டப் . இரண்டுக்கும் எந்த பாகுபாடு இன்றியும் கால் சீட்டுகளை ஒதுக்கி கொடுத்து நடித்து வருகிறார் அஜித்.

இப்பொழுது ஓராண்டாக எடுக்கப்படும் விடாமுயற்சி படத்தை பின்னுக்கு தள்ளிவிட்டு குட் பேட் அக்லி படம் வருகிற 2025 பொங்கல் தினத்தன்று ரிலீஸ் ஆகிறதாம். இதைப் பற்றி முறையான அறிவிப்பு டிசம்பர் மாதத்தில் வெளியிட இருக்கிறார்கள். இப்பொழுது படம் வெளிநாட்டில் பைஜெரியாவில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

பைஜெரியாவில் ஷூட்டிங் முடிந்த கையோடு சென்னையில் ஒரு வாரம் சூட்டிங் ஷெடியூல் மட்டும் மீதம் இருக்கிறதாம். அதையும் முடித்துவிட்டு, மீதம் இருக்கும் ஒரே மாதத்தில் போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகளை முடித்துவிட்டு குட் பேட் அக்லி படத்தை ரிலீஸ் செய்கிறார் ஆதிக்ரவிச்சந்திரன்.

தற்போது குட் பேட் அக்லி படம் பைஜெரியாவில் சூட்டிங் நடைபெற்று வந்தாலும் அதன் முதல் பாதி ஏற்கனவே முடிந்து விட்டது. படத்தில் எடுத்து முடித்த அந்த முதல் பாதியின் டப்பிங் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அஜித் மட்டும் ஷூட்டிங்கில் இருப்பதால் அவர் டப்பிங் பேசவில்லை. இருந்தாலும் அவருக்கும் மொபைல் டப்பிங் ரெடி பண்ணி வைத்திருக்கின்றார்கள்.

இவ்வளவு குறுகிய நேரத்தில் இந்த படம் எப்படி முடிக்க முடியும் என விசாரித்து பார்த்தால் அதற்கு இயக்குனர் ஆதிக்கின் வலது கரம் ஒருத்தரை பற்றி கூறுகிறார்கள். அவர்தான் நெருப்பு போல் எல்லா வேலைகளையும் பார்த்து வருகிறாராம். அவர் வேறு யாரும் இல்லை ஆதிக்கின் தந்தை ரவிச்சந்திரன். இவர்தான் இந்த படம் பொங்கலுக்கு ரெடி ஆவதற்கு முக்கிய காரணம்

- Advertisement -

Trending News