Tamil Cinema News | சினிமா செய்திகள்
அதிகாலை வரை காத்துகொண்டு இருந்த அஜித் ரசிகர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.!
தல ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று இரவு 9 மணியிலிருந்து காலை 5 மணி வரை காத்திருந்த செய்தி தற்போது வைரலாகி வருகிறது.
அஜித் சிவா இயக்கத்தில் தற்போது நடித்து வரும் திரைப்படம் விசுவாசம் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தது மேலும் முக்கிய காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டது, தற்போது அடுத்த கட்ட பணியில் இறங்கி உள்ளார்கள் படக்குழு.
அடுத்ததாக டப்பிங் பணிகளை உடனே தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள் படக்குழு முதலில் அஜீத்தான் டப்பிங் பணிகளை பூஜையுடன் தொடங்கி உள்ளார் சென்னையிலுள்ள டப்பிங் திரையரங்கில் அஜித் டப்பிங் பேசுவதற்கு வந்துள்ளார்.
அஜித் இங்கு தான் டப்பிங் பேசி வருகிறார் என அஜித் ரசிகர்கள் தெரிந்துகொண்டு டப்பிங் திரையரங்கத்திற்கு வெளியிலேயே இரவு 9 மணியிலிருந்து காத்துள்ளார்கள் அஜித் டப்பிங் பேசி வரும் வரை காத்திருந்து இருக்கிறார்கள்,அஜித் டப்பிங் பேசி முடிக்க நீண்ட நேரம் ஆகியது காலை ஐந்து மணிக்கு தான் முடிந்தது அதன் பிறகுதான் அஜித் வெளியே வந்திருக்கிறார் வெளியே வந்ததும் காரில் சென்றுள்ளார் அஜித்.
அஜித்தின் கார் பின்னால் ரசிகர்கள் கூட்டமாக ஓடியதால் அஜீத் அதை பார்த்து அதன் பின் காரை நிறுத்தச் சொல்லி காரை பின்னாடியே வந்துள்ளார் அஜித்,பின்பு ரசிகர்களை சந்தித்து அஜீத் அவர்களிடம் ஏன் எங்கு காத்துக் கொண்டிருக்கிறீர்கள் என விசாரித்துள்ளார்கள், அதற்கு அஜீத் ரசிகர்கள் உங்களைப் பார்க்க தான் வெகு நேரம் காத்துக் கொண்டிருக்கிறோம் உங்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் எனக் கூறியுள்ளார்கள்.
அதற்காகவே இப்போதுதான் டப்பிங் முடித்து விட்டு வந்திருக்கிறேன் கொஞ்சம் டயர்டாக இருக்கிறது தனித்தனியாக எடுத்துகொள்ள முடியாது இப்பொழுது, வேணும் என்றால் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொள்ளலாமா என்று அஜித் ரசிகர்களிடம் வேண்டுகோளாக கேட்டுள்ளார் அதற்கு அஜித் ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக எடுத்துக் கொண்டாலே போதும் சார் என கூறி இருக்கிறார்கள், அஜித் ரசிகர்கள் அதன் பின்பு புகைப்படம் எடுத்துக் கொண்டு சென்றுள்ளார்கள்.
அஜித்துடன் புகைப்படம் எடுத்துகொள்ள பல நடிகர்கள் முதல் ரசிகர்கள் வரை தவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
