Connect with us

Cinemapettai

அஜித்தை நேரில் பார்க்க வாய்ப்பு.. பல வருடங்களுக்கு பிறகு நேரில் வருகிறார்

rajini ajith

Celebrities | பிரபலங்கள்

அஜித்தை நேரில் பார்க்க வாய்ப்பு.. பல வருடங்களுக்கு பிறகு நேரில் வருகிறார்

அஜித்தை நேரில் பார்க்க வாய்ப்பு

அஜித்

தல அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்பொழுது போனி கபூர் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படம் பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் ஆகும் சமீபத்தில்தான் இந்த படத்தின் பூஜை நடைபெற்றது இதன் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரல் ஆனது.

ஸ்ரீதேவி

அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தான் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர், இவர் கடந்த வருடம் துபாயில் பிரபல நட்சத்திர ஹோட்டலில் ஒரு விழாவில் கலந்து கொண்டார் அந்த விழாவில் பார்ட்டி முடிந்தவுடன் மாரடைப்பால் இறந்து கிடந்தார்.

இது அங்கு இருந்த அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, இவர் இறந்து ஒரு வருடம் ஆக இருக்கிறது அதனால் நினைவஞ்சலி விரைவில் நடைபெற இருக்கிறது.

அஜித் பங்கேற்பு.

பொதுவாக நடிகர் அஜித் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள மாட்டார் இது அனைவருக்கும் தெரியும், இவர் எப்பொழுதும் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார், இவர் கடைசியாக  சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொண்டது கலைஞர் பாராட்டு விழாவில்தான்.

ஆனால் அந்த மேடையிலேயே மிகவும் தைரியமாக பேசினார் இதனால் அரங்கத்தில் இருந்த அனைவரும் எழுந்த கைத்தட்டினார்கள்.

இந்த நிலையில் அஜீத் மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியில் கலந்து கொள்ள இருக்கிறார், இதனை அறிந்த அஜித் ரசிகர்கள் இப்பொழுது ரெடியாகிவிட்டார்கள் அஜித்தை காண. இந்த செய்தி அஜித் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top