ajith-fansஅஜித்தின் ரசிகர்கள் பலம் அனைவரும் அறிந்ததே. இதை எந்த விதத்தில் நான் தவறாக பயன்ப்படுத்த மாட்டேன் என அவர் கூறி மன்றத்தையே கலைத்தார்.ஆனால், அவருடைய ரசிகர்கள் இன்றும் அவர் மீது மேலும் அன்பு செலுத்தி தான் வருகின்றனர்.

ஆனால், சமூக வலைத்தளங்களில் நேற்று இவர்கள் செய்த விஷயம் ஒன்று ஒட்டு மொத்த திரையுலகத்தினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.தெறி படத்தின் ப்ரீமியர் காட்சி வெளிநாடுகளில் திரையிட, பலரும் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பினர்.

இது ஒட்டுமொத்த திரையுலகத்தினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுக்குறித்து அவர்கள் தெரிவிக்கையில், வேதாளம் படத்திற்கு அவர்கள் இதை தான் செய்தார்கள் என்று விளக்கம் கொடுக்கின்றனர்.

ஒருவர் மேல் ஒருவர் வைத்திருக்கும் ஈகோ காரணத்தால் பல பேரின் உழைப்பு வீணாகின்றது என்பது எப்போது தான் இவர்களுக்கு புரியப்போகின்றதோ? என விஷயம் அறிந்தவர்கள் தலையில் அடித்துக்கொண்டு நகர்கிறார்கள்.