அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய லோகேஷ் கனகராஜ்.. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சீட்டீங்களே பாஸ்!

லோகேஷ் கனகராஜ் இதற்கு முன்பு தல அஜீத்தை வைத்து படம் எடுக்கவில்லை. அஜித் நடிக்கும் அடுத்த சில படங்களையும் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை. அப்புறம் ஏன் தல ரசிகர்கள் லோகேஷ் மீது கோபப்பட்டனர்.

மாநகரம், கைதி போன்ற படங்களின் வெற்றி மூலம் விஜய்யை கவர்ந்து மாஸ்டர் பட வாய்ப்பை பெற்றார். மாஸ்டர் படமும் எதிர்பார்க்காத அளவு பெரிய வெற்றியைப் பெற்று விஜய்யின் சினிமா கேரியரில் அவருக்கு ஒரு பெரிய மாஸ் படமாக அமைந்துவிட்டது.

இதன் காரணமாக மீண்டும் லோகேஷுடன் இணைந்து பணியாற்ற விஜய் ஆர்வமாக இருக்கிறார். இது ஒருபுறமிருக்க லோகேஷ் கனகராஜூக்கு மாஸ்டர் படத்திற்கு பிறகு மற்ற மொழிகளில் இருந்தும் படம் இயக்கும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது என்பதும் கூடுதல் தகவல்.

இந்நிலையில் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் தன்னுடைய குருநாதர் கமலஹாசனை வைத்து விக்ரம் எனும் படத்தை எடுக்க உள்ளார். இந்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதாக அறிவித்திருந்தார்.

vikram-first-look-announcement
vikram-first-look-announcement

இதைப்பார்த்த தல ரசிகர்கள் டென்ஷன் ஆகி விட்டனர். அது வேறொன்றும் இல்லை. கடந்த இரண்டு வருடமாக அஜித்தின் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட வெளியிடாமல் ரசிகர்களை நோகடித்து வருகின்றனர்.

ஆனால் அதற்கு மாறாக தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்கள் பற்றிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. இதனால் கோபப்பட்ட அஜித் ரசிகர்கள், நீங்களும் இப்படி பண்ணிட்டீங்களா? என விளையாட்டாக அவரது கமெண்ட் பக்கத்தில் தங்களுடைய கருத்துக்களை அள்ளி வீசி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்