அப்ப இனிச்சுது இப்ப கசக்குதா.. சுயநலவாதி வெங்கட் பிரபு, அஜித்துக்காக திரண்ட கூட்டம்

Ajith: கடந்த சில நாட்களாகவே சோசியல் மீடியாவில் கோட் தான் டிரெண்டிங்கில் இருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான இப்படம் முதல் நாளிலேயே நல்ல விமர்சனங்களை பெற்றது.

ஆனால் இப்போது படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தை ரசிகர்கள் சொல்ல முடியாத வார்த்தையில் திட்டித் இருக்கின்றனர். அதேபோல் சுயநலவாதி வெங்கட் பிரபு என்ற ஹாஷ்டேக்கும் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் அஜித்தை அவர்கள் ஓரம் கட்டியது தான். படம் வெளிவருவதற்கு முன்பு பிரமோஷன் என்ற பெயரில் வெங்கட் பிரபு அஜித் பற்றி தான் பேசிக் கொண்டே இருந்தார். டிரைலரை அஜித் பார்த்து வாழ்த்து சொன்னார்.

படம் வெளி வருவதற்கு முந்திய நாளே போன் செய்தார் என்று ஏகப்பட்ட அலப்பறை கொடுத்தார். அது மட்டும் இன்றி தயாரிப்பு தரப்பும் கூட இதை ஒரு பெரிய பிரமோஷன் ஆக செய்து அஜித் ரசிகர்களின் சப்போர்ட்டை பெற முயற்சித்தனர்.

அஜித்துக்காக திரண்ட ரசிகர்கள் கூட்டம்

ஆனால் படம் வெளிவந்த பிறகு இவர்களின் சுயரூபம் வெளிவந்துவிட்டது. அதாவது படத்தின் இறுதி காட்சியில் விஜய் நீ யாரோட ஃபேன் என கேட்கும் போது தல என்று அப்பெண் பதில் சொல்வார்.

அந்த இடத்தில் மங்காத்தா பிஜிஎம் வரும் இதை அஜித் ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடினார்கள். ஆனால் அது தல தோனியை குறிப்பிட்டு சொன்னது என சில ரசிகர்கள் டுவீட் போட்டு வருகின்றனர். அப்படி வைரலான ஒரு பதிவை ஏஜிஎஸ் அர்ச்சனா ரீட்வீட் செய்துள்ளார்.

இதனால் ரிலீசுக்கு முன்னாடி அஜித் பெயரை பயன்படுத்தும் போது இனிக்குது இப்ப கசக்குதா என ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும் தரங்கெட்ட ஏஜிஎஸ் என வைரலான ஹாஸ்டேக் இப்போது சுயநலவாதி வெங்கட் பிரபு என ட்ரெண்ட் ஆகி வருகிறது.

வெங்கட் பிரபுவை வச்சு செய்யும் ரசிகர்கள்

- Advertisement -spot_img

Trending News