Tamil Cinema News | சினிமா செய்திகள்
இப்பொழுதே ட்விட்டரை தெறிக்கவிட்ட அஜித் ரசிகர்கள்.!

நம்ம தல ரசிகர்கள் டிவிட்டரில் ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
தல,தளபதி ரசிகர்கள் எப்பொழுதும் டிவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்குவதில் ஸ்பெஷலிஸ்டுகள் என்றே கூறவேண்டும் எதாவது அஜித் அல்லது விஜய் பற்றிய அறிவிப்பு வந்தால் போதும் உடனே டிவிட்டரில் ட்ரெண்டாக்கி தெறிக்கவிடுவார்கள்.
இப்பொழுது அதை தான் தல ரசிகர்கள் டிவிட்டரில் தெறிக்க விட்டுள்ளார்கள் அஜித்தின் பிறந்தநாள் அனைவருக்கும் தெரியும் மே 1 ம் தேதி என இந்த நிலையில் அஜித் பிறந்தநாளுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் 100DAYS TO KING AJITH BDAY என்ற ஹேஷ்டேக்கை உலக அளவில் ட்ரெண்டாக்கி வருகிறார்கள்.
தல பிறந்தநாளை சிறப்பாக கொண்டாட தல ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படியிருக்க அஜித் பிறந்தநாளை 100 நாட்களுக்கு முன்பே ஆரம்பித்துவிட்டனர்.
தல பிறந்தநாளுக்கு தெறிக்க விட தற்போதே திட்டம் தீட்ட ஆரம்பித்த்துவிட்டார்கள் தல ரசிகர்கள். முதலில் ட்விட்டரை தெறிக்கவிட்டுள்ளனர்.
தல மேல ரசிகர்களுக்கு இவ்வளவு பாசமா பிறந்தநாள் வருவதற்கே இன்னும் 100 நாள் இருக்கிறது அதற்குள் ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்..
