தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் இவர் தமிழ் சினிமாவில் மிக பெரிய ரசிகர் கூட்டத்தை பெற்றுள்ளார். இவர் படம் திரைக்கு வந்தால் கட்டவுட் வைப்பதில் இருந்து பால் அபிஷேகம் வரை அஜித் ரசிகர்கள் அமர்கலப்படுத்திவிடுவார்கள் .

ajith

அஜித் படம் திரையில் வரும் பொழுது பார்த்தாலே தெரியும் அஜித் மீது, ரசிகர்கள் வைத்திருக்கும் பாசம்.

இவரின் படங்களை கொண்டாடுவது மட்டும் இல்லாமல் அஜித் பெயரில் தொண்டு நிறுவனம் நடத்திவருகிறார்கள் இதன் மூலம் படிக்க ஆசைபடும் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்கிறார்கள்.

இதனை அறிந்த ஸ்டண்ட் மாஸ்டர் தீனா, பிரேம்ஜி அமரன் ஆகியோர் தல ரசிகர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.

இதனை தல ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.