Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகர் அஜித்துக்கு அரசியல் அழைப்பு
அரசியலுக்கு அஜித் வர வேண்டும் என, அவரது ரசிகர்கள் அழைப்பு விடுத்து, போஸ்டர் ஒட்டி உள்ளனர்.நடிகர் அஜித், மே, ௧ல், 46வது பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவர் நடித்துள்ள, விவேகம் படம் விரைவில், திரைக்கு வர உள்ளது.
அஜித்தின் பிறந்த நாள் அன்று, விவேகம் படத்தின் டீசர் வெளியாகும் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். தான் உண்டு, தன் வேலை உண்டு என, இருக்கும் அஜித், ரசிகர்களும் அவ்வாறே இருக்க வேண்டும் எனக்கருதி, அரசி யல் மற்றும் கோஷ்டி சண்டையை தவிர்க்க, தன் ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். ஆனாலும், அவரது ரசிகர்கள் அஜித்தை, தலையில் வைத்து கொண்டாடி வருகின்றனர். அஜித் பிறந்த நாளை முன்னிட்டு, தென்மாவட்டங்களில் அவரது ரசிகர்கள், போஸ்டர், பேனர் என, பிரமாதப்படுத்தி வருகின்றனர்.
மதுரையைச் சேர்ந்த அவரது ரசிகர்கள், அரசியலுக்கு அஜித் வரவேண்டும் என, கோரிக்கை விடுத்து, போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், தோல்வி என்ற வார்த்தை கூட வெற்றி பெறும் உன்னால்; நீ தலை அசைத்தால், தமிழ்நாடு உன் பின்னால்… என, குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், அஜித் ரசிகர்கள், மே, ௧ஐ, தல தினம் என, கொண்டாட முடிவு எடுத்து, தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டி வருகின்றனர்.
சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.
