ajith

எந்தவொரு சினிமாப் பின்னணியும் இல்லாமல், தமிழ்த் திரையுலகில் நுழைந்து, தனது கடின உழைப்பால் முன்னேறி, தனக்கென ரசிகர்கள் கூட்டத்தைத் தனது நடிப்பால் உருவாக்கி, அவர்கள் மனத்தில் ‘தல’ என்று நிலைத்திருப்பவர் அஜித்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து, நடிகையாக வளர்ந்து, அவர் நடித்த ‘அமர்க்களம்’ என்ற படத்தில் அவருடன் இணைந்து நடித்த பேபி ஷாலினியை மணமுடித்தார்.

ajith

1999 ஆம் ஆண்டில், சரணின் ‘அமர்க்களம்’ என்ற படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்த போது, ஷாலினி மீது அவர் காதல் வயப்பட்டதால், ஜூன் மாதம் அவரிடம் தனது காதலைத் தெரிவித்தார்.

ஷாலினியும் இதற்கு ஒப்புக்கொண்டதால், இரு வீட்டார் சம்மதத்துடன் இருவரும் ஏப்ரல் மாதம் 2௦௦௦ ஆம் ஆண்டில் சென்னையில் இருமத முறைப்படி திருமண பந்தத்தில் இணைந்தனர்.

ajith

அவர்களது திருமணத்திற்குப் பின்னர், தனது திரையுலக வாழ்வில் இருந்து ஓய்வுபெற்றார் ஷாலினி. அவர்களுக்கு, ஜனவரி மாதம் 3 ஆம் தேதி, 2008 ஆம் ஆண்டில் அனோஸ்கா என்ற மகள் பிறந்தாள்.

நடிகர் அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என ஒதுங்கியவர். அவருக்கு அதிகமான ரசிகர்கள் கூட்டம் பட இடங்களில் இருப்பதை காணலாம். படம் வெளியானால் திருவிழா கொண்டாட்டம் தான்.

ajith-shalini

ரசிகர் மன்றம் இல்லாவிட்டாலும் எங்கள் தல க்காக நாங்கள் என்ன வேண்டும் என்றாலும் செய்வோம் என் குரல் கொடுப்பவர்களும் உண்டு. அஜித்தின் பிறந்த நாள் மட்டுமல்ல, அவரின் குடும்பத்தில் இருக்கும் மற்றவர்களின் பிறந்தநாளையும் சிறப்பாக கொண்டாடினார்கள்.

shalini

வரும் நவம்பர் 10 ம் தேதி அஜித்தின் மனைவி ஷாலினியின் பிறந்தநாள் வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை இப்போதே ஆரம்பித்துவிட்டார்கள். மதுரையை சேர்ந்த அஜித் ரசிகர்கள் இதன் பேனரை வெளியிட்டுள்ளனர்.