Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் இந்த பிறந்தநாளிலும் அவரை மிஸ் செய்யும் ரசிகர்கள்..

சினிமா பிரபலங்களின் பிறந்தநாளில் அவர்களை சந்திக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருக்கும். ஆனால், அஜித் படைக்கு அந்த ஆசை இந்த வருடமும் நடக்கவில்லை. தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு பிறகு அதிக ரசிகர்களை கொண்டது விஜயும், அஜித்தும் தான். இரண்டு பிரபலங்களின் பிறந்தநாளும் அவரது ரசிகர்களால் ஜோராக கொண்டாடப்படும்.

இந்த வருட கொண்டாட்டத்தின் முதல் பகுதியாக இன்று அஜித்தின் பிறந்தநாளை ரசிகர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மன்றங்களை கலைத்தும், அவருக்கு இருக்கும் ஆதரவு கணக்கில்லாமல் பெருகி கொண்டே தான் இருக்கிறது. சினிமா பின்னணியே இல்லாமல் கால் பதித்த அஜித், பல தோல்விகளை சந்தித்து இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார். இருந்தும் அவர் தன் புகழை எங்குமே பயன்படுத்தி கொள்ளவில்லை.

இந்நிலையில், இவரின் பிறந்தநாளில் ரசிகர்கள் ரத்த தானம் முதல் அன்னதானம் என பல நல்ல விஷயங்களை செய்து வருகின்றனர். ஆனால், அவர்களுக்கு ஒரு ஆசை இருக்கத்தானே செய்யும். அதும், தல தரிசனம் என்றால் கேட்கவா வேணும். அவரின் பிறந்தநாளில் பார்க்க வேண்டும் என்பது ரசிகர்களின் பெரும் ஆசையாகவே இருந்து வருகிறது. எல்லா வருடமும் அந்த ஆசை தட்டி தட்டி போய் கொண்டே இருக்கிறது. இந்த வருடமாவது அஜித்தை பார்த்து விடுவோம் என ஆசை கொண்டு இருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது.

அதற்கு காரணம், பல நாட்களாக தள்ளிப்போன விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பு இந்த வார இறுதியில் தொடங்க இருக்கிறது. அதற்காக, ஐதராபாத் பிலிம் சிட்டியில் பல கோடி ரூபாயிற்கு செட் அமைக்கப்பட்டு இருக்கிறது. இதில், கலந்து கொள்ள அஜித் தற்போது ஐதராபாத்தில் இருக்கிறார். தன் புகழை விட பணியையே முக்கியமாக கருதுபவர். இதனால் தான் இன்றும் தமிழ் சினிமாவின் தல என்ற அந்தஸ்தை தக்க வைத்து இருக்கிறார்.

விவேகம் படத்தை தொடர்ந்து நான்காவது முறையாக இயக்குனர் சிவாவுடன் இணைந்து இருக்கிறார். நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். தயாரிப்பாளர் சங்க போராட்டத்தால் லேட்டாக தொடங்கி இருக்கும் படப்பிடிப்பால் ரிலீஸும் தள்ளி போக இருக்கிறது. இதனால், அடுத்த புத்தாண்டு தல புத்தாண்டாக இருக்கும் என கிசுகிசுக்கப்படுகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top