Connect with us
Cinemapettai

Cinemapettai

வலிமை பட பர்ஸ்ட் லுக் கூட விடவில்லை.. ஆனாலும் டிவிட்டரில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.. இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவீங்க!

ajith-kumar-valimai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை பட பர்ஸ்ட் லுக் கூட விடவில்லை.. ஆனாலும் டிவிட்டரில் மாஸ் காட்டிய அஜித் ரசிகர்கள்.. இதுக்கெல்லாமா இப்படி பண்ணுவீங்க!

தல அஜித் அவர்களுக்கு ரசிகர் மத்தியில் எவ்வளவு மாஸ் இருக்கிறதோ அதே போன்று அவரது ரசிகர்களும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் மாஸ் காட்டுவதை வேலையாக வைத்துள்ளனர்.

போர் அடிக்கிறது என்றால் கூட தல அஜித்தை ட்ரண்ட் செய்து கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் நீண்ட நாட்களாக டிவிட்டர் நிறுவனத்தால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட தல அஜித் ரசிகர்கள் பக்கம் ஒன்று மீண்டும் ட்விட்டரில் இணைந்தது.

இதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு நேற்று தல அஜித் மற்றும் வலிமை ஆகியவற்றை ட்விட்டரில் ட்ரென்ட் செய்து கொண்டாடி வந்தனர் தல ரசிகர்கள். இதனைப் பார்த்த மற்ற ரசிகர்கள் கொஞ்சம் பொறாமை பட தான் செய்தனர்.

சமூக வலைதளங்களை பொருத்தவரை தல அஜித் ரசிகர்கள் மற்றவர்களை விட கொஞ்சம் முன்னிலையில் உள்ளதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். எடுத்துக்காட்டாக தல அஜித்தை பற்றி அல்லது தல அஜித் என்ற பெயரைக் கேட்டாலே அந்த செய்தியை அவர்களது வட்டாரங்களுக்கு பரப்பி விடுகின்றனர்.

அது நல்லதோ கெட்டதோ. எதுவாக இருந்தாலும் தல அஜித் ரசிகர்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் தெளிவாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் மற்ற ரசிகர்கள் எதை செய்கிறார்களா என்பது கேள்விக்குறிதான்.

உண்மையை சொல்ல வேண்டுமானால் வலிமை படத்தின் முதல்பார்வை போஸ்டர் கூட இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இதுவரை ட்விட்டரில் 25 மில்லியன் டேக்குகளை பெற்று நம்பர் 1 இடத்தில் உள்ளது வலிமை.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top