ajith
ajith

அரசியலை தாண்டி சினிமாவில் பல விஷயங்கள் சாதனை நோக்கோடு நடக்கிறது.. அந்த பனிரெண்டு ஒன்னுக்கும் விழித்திருந்து ட்ரெய்லரை ட்ரென்டிங்கில் கொண்டு வந்தார்கள் அஜித் ரசிகர்கள். ட்ரைலர் போட்ட அடுத்த நிமிஷமே அது பல ஆயிரங்களை கிராஸ் பண்ணிவிட்டதாக கூறுகிறது இன்டஸ்ட்ரி. தற்போதையக் கணக்குப்படி பல லட்சங்களை தாண்டிவிட்டது.

ஆனால் “இந்த ட்ரெய்லரை காலையில் வெளியிட்டா என்னவாம்? ராத்திரி 12 மணி வரைக்கும் வெயிட் பண்ணி பார்க்கணுமா?” என்று தனது கருத்தை இதே ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் தயாரிப்பாளர் தனஞ்செயன். அண்மையில் வெளிவந்த வனமகன், இவன் தந்திரன் படங்களெல்லாம் தனஞ்செயனின் ரிலீஸ்தான். இது தவிர ஏராளமான படங்களை தயாரித்திருக்கிறது தனஞ்செயன் தலைமையிலான நிறுவனங்கள்.

அதிகம் படித்தவை:  தவிக்கவிடும் அஜித் கைகொடுக்கும் விக்ரம் புதிய கூட்டனி?

dhanunchayanகருத்து கந்தசாமிகள் யாராக இருந்தாலும், அவர்களை பிரித்து மேய்கிற ரசிகர்கள் தனஞ்செயனை மட்டும் விட்டுவிடுவார்களா என்ன? பிலுபிலுவென பிடித்துக் கொண்டார்கள். வனமகன் படத்திற்காக நள்ளிரவு 12 மணிக்கு ட்ரெய்லரை ரிலீஸ் பண்ணியதையும், அந்த அறிவிப்பை தனஞ்செயன் ட்விட் பண்ணியதையும் தேடி எடுத்து வைத்துக் கொண்டு திரும்ப திரும்ப தாளித்தார்கள்.

அதிகம் படித்தவை:  அஜித்தின் அமர்க்களம் வந்த போது வசூல் அள்ளியது எத்தனை கோடி தெரியுமா.?!!!

ajith vivegam record